மேலும்

அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவராக நியமிக்கப்படுகிறார் அருணி ரணராஜா

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, அமெரிக்காவிற்கான சிறிலங்காவின்  தூதுவராக நியமிக்கப்படவுள்ளார் என, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் விஜித ஹேரத், சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில் வெற்றிடமாக உள்ள இடங்களுக்கு, தகுதியான நபர்களை அரசாங்கம் விரைவில் நியமிக்கும் என்று தெரிவித்தார்.

கனடாவிற்கான சிறிலங்காவின் தூதுவராக ரோஹன அம்பகொல்ல நியமிக்கப்படவுள்ளதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

அமெரிக்காவுக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ள அருணி ரணராஜா, வெளிவிவகார அமைச்சில் 30 ஆண்டுகால சேவை அனுபவம் கொண்ட ஒரு தொழில்முறை இராஜதந்திரி ஆவார்.

இவர் இதற்கு முன்னர் நெதர்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கான சிறிலங்கா தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் அமெரிக்காவுக்கான தூதுவராக நியமிக்கப்படும் முதல் பெண் தூதுவராவார்.

அவர் கடமைகளை எப்போது பொறுப்பேற்பார் என்பது அறிவிக்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *