திருகோணமலை துறைமுகத்தில் இந்திய கடலோரக் காவல்படை கப்பல் சுஜய்
இந்தியக் கடலோரக் காவல்படையின் ரோந்துக் கப்பலான ‘ஐசிஜிஎஸ் சுஜய்’ (ICGS Sujay), சிறிலங்காவுகு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டு, நேற்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்தக் கப்பலுக்கு, சிறிலங்கா கடலோரக் காவல் படை மற்றும் கடற்படையினர், பாரம்பரிய கடற்படை மரபுகள் மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் உற்சாக வரவேற்பளித்தனர்.
இந்தக் கப்பல் நவம்பர் 25ஆம் நாள் வரை திருகோணமலையில் தங்கியிருக்கும்.
இந்தக் கப்பலின் வருகையின் முதன்மை நோக்கம், கூட்டு அனைத்துலக மிதிவண்டிப் பயணத்தில் (பங்கேற்பாளர்களையும் அவர்களது உபகரணங்களையும் கப்பலில் ஏற்றுவது உள்ளிட்ட செயற்பாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்வதாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

