மேலும்

மாதம்: June 2017

மன்னார் கடற்படுக்கையில் 60 ஆண்டுகளுக்குத் தேவையான எண்ணெய் வளம்

மன்னார் கடற்படுக்கையில், 5 பில்லியன் பரல் எண்ணெயும், 9 ரில்லியன் சதுர அடி இயற்கை எரிவாயுவும் இருப்பதாக, பொது கணக்குக் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

3 நாடுகளுக்கான தூதுவர்கள் திருப்பி அழைப்பு – வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க அதிரடி

வினைத்திறனுடன் செயற்படவில்லை என்பதால், மூன்று நாடுகளுக்கான தூதுவர்களை சிறிலங்கா அரசாங்கம் கொழும்புக்குத் திருப்பி அழைத்துள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

படகில் வந்த 20 அகதிகளை கொழும்புக்குத் திருப்பி அனுப்பியது அவுஸ்ரேலியா

கிறிஸ்மஸ் தீவில் இருந்து சுமார் 20 அகதிகள் வாடகை விமானம் ஒன்றின் மூலம் இன்று காலை கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று தி ஒஸ்ரேலியன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தம்மை ஆதரித்தவர்களுக்கு நன்றி கூறுகிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

அண்மையில் நடந்த அரசியல் குழப்பங்களின் போது, தமக்கு ஆதரவு அளித்த தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவித்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தெற்கின் சதித் திட்டம் – பதிலளிக்காமல் நழுவிய முதலமைச்சர்

வடக்கு அரசியலில் அண்மையில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு, தெற்கிலேயே திட்டங்கள் வகுக்கப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தற்போது, அதுபற்றிப் பேசுவதை தவிர்த்துக் கொண்டுள்ளார்.

சட்டமூலத்தை நிறைவேற்றாவிடின் 100 மில்லியன் டொலர் கடன் ரத்து – உலக வங்கி எச்சரிக்கை

கணக்காய்வுச் சட்டமூலத்தை உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, அங்கீகாரம் பெறாவிடின், வரும் செப்ரெம்பர் மாதம் அளிக்க வேண்டிய 100 மில்லியன் டொலர் கடனுதவியை இடைநிறுத்தப் போவதாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

எந்த நேரத்திலும் உங்களுடன் பாகிஸ்தான் நிற்கும் – மகிந்தவை உசுப்பேற்றிய ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர்

எந்த நேரத்திலும் உங்களுடன் பாகிஸ்தான் நிற்கும் என்று, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ எனப்படும், புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரான, லெப்.ஜெனரல் றிஸ்வான் அக்தர், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு, உறுதியளித்துள்ளார்.

வடக்கு அரசியல் குழப்பத்தை தீர்க்குமாறு சம்பந்தனை வலியுறுத்திய வெளிநாடுகள்

அண்மையில் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை, முடிவுக்குக் கொண்டு வருமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, வெளிநாட்டு தூதுவர்கள் பலரும் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜேர்மனிக்கான தூதுவராக கருணாசேன ஹெற்றியாராச்சியை நியமிக்க நாடாளுமன்றக் குழு அங்கீகாரம்

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியை ஜேர்மனிக்கான தூதுவராக நியமிப்பதற்கான, ஒப்புதலை உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு அளித்துள்ளது.

பாரிய அரிசித் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் – இறக்குமதிக்குத் தயாராகிறது சிறிலங்கா அரசு

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 40 வீதம் அறுவடை குறையும் என்று ஐ.நா உணவு விவசாய நிறுவனம் மற்றும் ஐ.நா உணவுத்திட்டம் என்பன எச்சரிக்கை விடுத்துள்ளதால், சிறிலங்காவில் பாரிய அரிசித் தட்டுப்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.