மேலும்

நாள்: 1st June 2017

சிறிலங்காவில் அமெரிக்க இராணுவ பயிற்சி அதிகாரிகள் குழு

அமெரிக்க இராணுவ பயிற்சி அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. அமெரிக்க இராணுவ ஒதுக்குப்படை அதிகாரிகள் பயிற்சிப் படையணியைச் சேர்ந்த 33 அதிகாரிகள் இரண்டு வாரகாலப் பயணமாக சிறிலங்கா வந்துள்ளனர்.

சீன கடற்படை உயர் அதிகாரிகள் சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

சீன கடற்படையின் உயர்மட்ட அதிகாரிகள் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

உலங்குவானூர்திகளுக்கான உதிரிப்பாகங்களை சிறிலங்காவுக்கு வழங்கியது இந்தியா

சிறிலங்கா விமானப்படையின் உலங்குவானூர்திகளுக்குத் தேவையான அவசர உதிரிப்பாகங்களை இந்திய விமானப்படை விநியோகித்திருப்பதாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சுங்க, துறைமுக பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து சிறிலங்கா- அமெரிக்கா இடையே பேச்சு

அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் சுங்க மற்றும் துறைமுக பாதுகாப்பு தொடர்பாக வலுவான ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது குறித்து பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

உதவிக் குழுக்களுடன் சீனாவின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்பு வந்தன

சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப் பணிகளை மேற்கொள்வதற்கும், உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டும் சீன கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

சம்பூரில் உயிருடன் கரையொதுங்கிய 20 திமிங்கலங்கள்

திருகோணமலை – சம்பூரில் 20 இற்கு மேற்பட்ட திமிங்கலங்கள் நேற்று கரையொதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்ட மோரா சூறாவளி மற்றும் சிறிலங்காவில் கொட்டிய கடும் மழையைத் தொடர்ந்து, சம்பூர், பழைய இறங்குதுறைப் பகுதியில் 20இற்கும் அதிகமான திமிங்கலங்கள் நேற்று கரையொதுங்கின.

குண்டுப் புரளி கிளப்பிய இலங்கையரால் மலேசிய விமானம் மெல்பேர்னில் அவசரமாக தரையிறக்கம்

மலேசியன் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவர் குண்டுப் புரளி கிளப்பியதுடன் விமானியின் அறைக்குள் நுழைய முயன்றதால் விமானம் அவசரமாக மெல்பேர்ன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

சீன நீர்மூழ்கிக்கு கொழும்பு அனுமதி மறுத்ததில் இந்தியாவின் தலையீடு இல்லை – அட்மிரல் லன்பா

சீன நீர்மூழ்கி கொழும்பில் தரித்து செல்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி மறுத்த விடயத்தில் இந்தியா செல்வாக்குச் செலுத்தவில்லை என்று இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா தெரிவித்துள்ளார்.