மேலும்

நாள்: 11th June 2017

அமெரிக்க பாதுகாப்புச் செயலருடன் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் சந்திப்பு

அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ஜேம்ஸ் மாட்டிசை, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

திருகோணமலையில் பாகிஸ்தான் கடற்படைத் தளபதி

பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் மொகமட் சகாவுல்லா சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, விமான நிலையத்தில் வரவேற்றார்.

உதவிப் பணிகளில் ஈடுபட கொழும்பு வந்தது யுஎஸ்எஸ் லேக் எரி போர்க்கப்பல்

அமெரிக்க கடற்படையின் பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த வழிகாட்டல் ஏவுகணைப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் லேக் எரி (USS Lake Erie) 14 நாட்கள் பயணமாக, கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் – சீனாவுடன் இன்னமும் உடன்பாடு இல்லை.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கும் விடயத்தில், சீன நிறுவனத்துக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் இன்னமும் உடன்பாடு ஏற்படவில்லை என்று சிறிலங்காவின் துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழ்ப்பெண் ரதி தோல்வி

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இலங்கையில் பிறந்த தமிழ்ப் பெண்ணான ரதி அழகரத்தினம் தோல்வியடைந்துள்ளார். இவர், ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சியின் சார்பில், ஹரோ வெஸ்ட் தொகுதியில் போட்டியிட்டார்.

தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுத் தலைவர் பிரித்தானிய தேர்தலில் தோல்வி

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில், தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவராக இருந்த ஜேம்ஸ் பெரி தோல்வியடைந்துள்ளார். கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் இவர், கிங்ஸ்டன் அன் சேர்பிடன் தொகுதியில் தொகுதியில் போட்டியிட்டிருந்தார்.

சிறிலங்கா இராணுவத்தின் பட்டியலை நிராகரித்த ஐ.நா – 400 பேரில் 40 பேருக்கே மாலி செல்ல அனுமதி

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக சிறிலங்கா அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட 400 சிறிலங்கா படையினரில் 40 பேருக்கு மாத்திரமே ஐ.நா அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு அமைச்சர்கள் விவகாரம்: விக்கியின் கையில் முடிவு – நழுவினார் சம்பந்தன்

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் விவகாரத்தில் தாம் தலையிடப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுக்கு உள்ளான வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா பதவி விலகினார்

முதலமைச்சர் விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினால் குற்றம்சாட்டப்பட்டுள்ள வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா நேற்று தற்காலிகமாக பதவியில் .இருந்து விலகியுள்ளதாக சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய தேர்தலில் இலங்கை தமிழ் வம்சாவளிப் பெண்ணான தங்கம் அமோக வெற்றி

இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரித்தானி்ய நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 37 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றியைப் பெற்றுள்ளார்.