மேலும்

நாள்: 4th June 2017

ஹெய்டியில் சிறிலங்கா படைகளின் பாலியல் குற்றங்கள் மூடிமறைக்கப்பட்டது எப்படி? – பகுதி -2

‘மாலியில் பணியாற்றுவதற்காக எமது வீரர்கள் அழைக்கப்பட்டமையானது அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் பொய் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது’ என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்சா டீ சில்வா தெரிவித்தார்.

பத்தேகமவில் வீழ்ந்த உலங்குவானூர்தியை மீட்டது சிறிலங்கா விமானப்படை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிப் பொருட்களை விநியோகித்துக் கொண்டிருந்த போது காலி- பத்தேகம பகுதியில் விபத்துக்குள்ளாகி வீழ்ந்த எம்.ஐ-17 உலங்குவானூர்தி சிறிலங்கா விமானப்படையினரால் மீட்டுக் கொண்டு செல்லப்பட்டது.

இரட்டைக் குடியுரிமை கொண்ட சிறிலங்கா தூதுவர்கள் மாட்டினர்

வெளிநாடுகளில் பணியாற்றுகின்ற சிறிலங்காவின் மூன்று தூதுவர்கள் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கண்டறிந்துள்ளது.

ட்ரம்ப் அரசின் முக்கிய பிரமுகர்களைச் சந்திக்கிறார் ரணில்- மருத்துவ சோதனைகள் முடிந்தன

தனிப்பட்ட பயணமாக அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மருத்துவ பரிசோதனைகளை முடித்துக் கொண்டுள்ள நிலையில், அடுத்தவாரம் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்துவார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உதவிப் பொருட்களுடன் கொழும்பு வந்தது சீன விமானம்

சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 2.2 மில்லியன் டொலர் பெறுமதியான உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சீன விமானம் ஒன்று நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

தொடர் தீவிரவாத தாக்குதல்களில் 7 பேர் பலி – பீதியில் உறைந்தது லண்டன்

லண்டனில் நேற்றிரவும் இன்று அதிகாலையும் நடத்தப்பட்டுள்ள தொடர்தீவிரவாத தாக்குதல்களால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டிருப்பதாக லண்டனில் இருந்து வெளியாகும் சன் நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

350 மில்லியன் ரூபாவை சிறிலங்காவுக்கு வழங்குகிறது அமெரிக்கா

வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு, அமெரிக்கா 350 மில்லியன் ரூபாவை மனிதாபிமான கொடையாக வழங்கியுள்ளது.