மேலும்

நாள்: 5th June 2017

ஈழத்தமிழர்கள் நீதியுடன் கூடிய அரசியல் தீர்வை அடைவதற்கு வலுவான அரசியல் கட்டமைப்பு அவசியம்

ஈழத்தமிழ் மக்கள் கோரி நிற்பது நீதியுடன் கூடிய அரசியல் தீர்வு. அதனை அடைவதற்கு வலுவான அரசியல் கட்டமைப்பினைத் தமிழ் மக்கள் உருவாக்கித் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என பேராசிரியர் இராமு மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் உலோக வீடுகளை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சிவில் சமூகம்

வடக்கு கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6000 உலோகப் பொருத்து வீடுகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பாக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை பொது அமைப்புக்கள் எதிர்த்துள்ளன. இந்த வீடுகள் தமக்கு வேண்டாம் என மக்கள் கூறிவரும் நிலையில், இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டை மேலும் கடன் சுமைக்குள் தள்ளும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஐங்கரநேசன், குருகுலராசா பதவி விலக வேண்டும் – விசாரணைக்குழு அறிக்கையில் பரிந்துரை

வடக்கு மாகாணசபையின் கல்வி அமைச்சர் குருகுலராசாவும், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனும், பதவியில் இருந்து விலக வேண்டும் என்று, வட மாகாண  அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளது.

துறைமுக நகரத்தை கொழும்புடன் இணைக்க நெடுஞ்சாலை, சுரங்கப்பாதைகள், தொடருந்துப் பாதை

1.5 பில்லியன் டொலர் செலவில் சீன நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு வரும் கொழும்பு துறைமுக நகரத்தை, கொழும்புடன் இணைப்பதற்கான நெடுஞ்சாலை, சுரங்கப்பாதைகள், மற்றும் தொடருந்துப் பாதை என்பன அமைக்கப்படவுள்ளன.

ஆட்சியைக் கவிழ்க்குமாறு மகிந்தவை உசுப்பேற்றும் ஜப்பானில் உள்ள இலங்கையர்கள்

சிறிலங்காவில் ஆட்சியில் இருக்கும் தற்போதைய அரசாங்கத்தினால் ஜப்பானில் உள்ள இலங்கையர்கள் விரக்தி அடைந்துள்ளனர் என்றும், ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர் என்றும் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பளை துப்பாக்கிச் சூடு – உரும்பிராய் இளைஞன் சந்தேகத்தில் கைது

பளை- கச்சார்வெளிப் பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக உரும்பிராயைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் சிறிலங்கா காவல்துறையின் தீவிரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளை மாளிகை அதிகாரிகளை இன்று சந்திக்கிறார் சிறிலங்கா பிரதமர்

அமெரிக்காவுக்குத் தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் இருவரை இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.