மேலும்

நாள்: 3rd June 2017

சிறிலங்காவில் இரண்டு டொப்ளர் ராடர்களைப் பொருத்துகிறது ஜப்பான்

மோசமான வானிலை தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் சிறிலங்காவில் இரண்டு டொப்ளர் ராடர்களை ஜப்பான் பொருத்தவுள்ளது.

ஜப்பானின் அழைப்பின்றியே டோக்கியோ சென்றார் மகிந்த

ஜப்பானிய பேரரசர் அகிஹிடோவின் அழைப்பின் பேரில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச ஜப்பானுக்குச் செல்லவில்லை என்று கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி உதவிகளை வழங்கினார் சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரி மாவட்ட மக்களை நேரில் பார்வையிட்டு உதவிகளை வழங்கினர்.

சிறிலங்கா படைகளின் பாலியல் குற்றங்கள் மூடிமறைக்கப்பட்டது எப்படி? – அனைத்துலக ஊடகம்

ஹெய்டியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா இராணுவ வீரர் எவ்வித பாலியல் வன்புணர்வுச் சம்பவத்திலும் ஈடுபடவில்லை என தனது தாயார் வீட்டின் தோட்டத்தில் கதிரை ஒன்றில் அமர்ந்தவாறு மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் உறுதிபடத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து 10 பாரஊர்திகளில் உதவிப் பொருட்கள் அனுப்பிவைப்பு

சிறிலங்காவின் தென், மேல், சப்ரகமுவ மாகாணங்களில் கடந்தமாத இறுதியில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான, வடக்கில் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் உதவிப் பொருட்கள், நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் இன்னும் 50 ஆண்டுகளில் அரைப் பாலைவனமாக மாறும் – எச்சரிக்கிறார் சம்பிக்க

அடுத்த 50 ஆண்டுகளில் யாழ்ப்பாணம் அரைப் பாலைவனமாக மாறிவிடும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க.

மைத்திரியுடன் பேசுமாறு மகிந்தவுக்கு அழுத்தம் கொடுக்கும் வெளிநாட்டு சக்தி

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன், மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியை மீண்டும் இணைய வைப்பதில் வெளிநாட்டு சக்தி ஒன்று, அழுத்தங்களைக் கொடுத்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நந்திக்கடலில் மில்லியன்கணக்கான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கின

முல்லைத்தீவு- வட்டுவாகல் பகுதியில் மில்லியன் கணக்கான மீன்கள் இறந்து கரையொதுங்கியுள்ளன. இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது.

கீத் நொயார் கடத்தல் – கோத்தாவிடம் மூன்று மணிநேரம் தீவிர விசாரணை

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தினர்.

வெளிவிவகார இராஜாங்க அமைச்சராகப் பொறுப்பேற்றார் டி.எஸ்.சேனநாயக்கவின் கொள்ளுப்பேரன்

சிறிலங்காவின் புதிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் பணிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.