மேலும்

நாள்: 23rd June 2017

சிறிலங்காவில் புதிதாக தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

கபொத உயர்தரப் பரீட்சையில், சித்தியடைந்த மாணவர்களுக்கு, தொழில்நுட்ப மற்றும் பொறியியல் பட்டங்களை வழங்கும் வகையில் சிறிலங்காவில் புதிதாக தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது.

காணாமல்போனோருக்கான பணியகத்துக்கு விசாரணை நடத்தும், வழக்குத் தொடுக்கும் அதிகாரம் இல்லை

காணாமல்போனோருக்கான பணியகத்துக்கு குற்றவியல் விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரமோ, சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரமோ இருக்காது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சிறிலங்கா துறைமுகங்களை உன்னிப்பாக அவதானிக்கிறது பிரான்ஸ்

சிறிலங்காவின் துறைமுகங்களில், குறிப்பாக கொழும்பு துறைமுகம் தொடர்பாக இடம்பெற்று வரும் மாற்றங்களை பிரான்ஸ் உன்னிப்பாக பின்தொடர்ந்து வருகிறது. ஏனென்றால், பிரெஞ்சு நிறுவனங்கள், இங்கு கால்வைப்பதற்கு ஆர்வம் கொண்டுள்ளன என்று சிறிலங்காவுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் மரின் சூ தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் வரட்சியால் 9 இலட்சம் பேரின் உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – ஐ.நா அறிக்கை

சிறிலங்காவில் வரட்சி மற்றும் வெள்ளத்தினால் உணவு உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 9 இலட்சம் மக்களின் உணவுப் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பதாக, ஐ.நா அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மீது சரத் வீரசேகர முறைப்பாடு

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் மற்றும் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்  மோனிகா பின்டோ ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, ஐ.நா மனித உரிமைகள் பேரவை தலைவரிடம் றியர் அட்மிரல் சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.