மேலும்

நாள்: 28th June 2017

ananthi-sarveswaran

சர்வேஸ்வரன், அனந்திக்கு 3 மாதங்களுக்கு தற்காலிக அமைச்சர் பதவி – விக்கி அறிவிப்பு

வடக்கு மாகாணசபையின் கல்வி அமைச்சராக கலாநிதி சர்வேஸ்வரனையும், பெண்கள் விவகார அமைச்சராக அனந்தி சசிதரனையும்,  3 மாதங்களுக்கு, தற்காலிக  அடிப்படையில் நியமிக்க முடிவு செய்திருப்பதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

gavel

11 தமிழர்களைக் கடத்திய சிறிலங்கா கடற்படை புலனாய்வு அதிகாரிக்குப் பிணை

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில், 2009ஆம் ஆண்டு 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்படைப் புலனாய்வு அதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Poddala-Jayantha

சிறிலங்காவில் வெள்ளை வான் சித்திரவதைக்கு நீதி கேட்கும் ஊடகவியலாளர்

சிறிலங்காவைச் சேர்ந்த ஊடகவியலாளரான போத்தல ஜயந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளை வான் தன்னைக் கடத்திய சம்பவம் தொடர்பாக விபரிக்கிறார். இவர் பின்னர் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்திருந்தார்.எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் வெள்ளை வானில் கடத்தப்பட்டு பல மணி நேரங்கள் அந்த வானிற்குள் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளானதாகவும் ஊடகவியலாளர் கூறினார்.

new general welcome

புதிய நான்கு நட்சத்திர ஜெனரலுக்கு இராணுவ மரியாதை

நான்கு நட்சத்திர ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கு இன்று இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளி்க்கப்பட்டது.

Mahinda Deshapriya

ஒக்ரோபர் முதல் வாரத்தில் கிழக்கு உள்ளிட்ட 3 மாகாணசபைகளுக்கான தேர்தல்

கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ மாகாணசபைகளுக்கான தேர்தலை, வரும் ஒக்ரோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக, சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

Ravi-Karunanayake

புதிதாக பல நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை விரிவுபடுத்தவுள்ளது சிறிலங்கா

வர்த்தக இராஜதந்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பல நாடுகளுடன் புதிதாக இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவிருப்பதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ranjith siyambalapitiya

சம்பூரில் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி திட்டமும் கைவிடப்பட்டது

சம்பூரில் இயற்கை எரிவாயு மின் நிலையத்தை அமைக்கும் முடிவை சிறிலங்கா அரசாங்கம் கைவிட்டுள்ளது. அங்கு 50 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி நிலையமே அமைக்கப்படும் என்று, சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

punkuduthivu-vithya

வித்தியா கொலை வழக்கு – யாழ். மேல் நீதிமன்றில் இன்று விசாரணைகள் ஆரம்பம்

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, யாழ். மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட தீர்ப்பாயம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.