மேலும்

மாதம்: June 2017

சிறிலங்கா இராணுவத் தளபதி நான்கு நட்சத்திர ஜெனரலாக பதவி உயர்வு

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வா, நான்கு நட்சத்திர ஜெனரலாக, சிறிலங்கா அதிபர் மைதை்திரிபால சிறிசேனவினால்  பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

தேவைகள், முன்னுரிமைகளுக்கு அமையவே அமைச்சர்களின் நியமனம் – முதலமைச்சர்

வடக்கு மாகாண கல்வி அமைச்சரின் நியமனம் போருக்குப் பின்னரான, தேவைகளுக்கும் முன்னுரிமைகளுக்கும் அமைவாகவே இடம்பெறும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சர் பதவிக்கு ஆர்னோல்ட் – தமிழ் அரசுக் கட்சி பரிந்துரை

வடக்கு மாகாண கல்வி அமைச்சராக, மாகாணசபை உறுப்பினர் இமானுவேல் ஆர்னோல்ட்டை நியமிக்குமாறு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, இலங்கை தமிழ் அரசுக் கட்சி பரிந்துரைக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஓய்வுபெற்றவர்களுக்கு இராஜதந்திரப் பதவி கிடையாது – வெளிவிவகார அமைச்சர் உறுதி

இராஜதந்திர சேவையில் கல்விப் புலமை மற்றும் ஆற்றல் கொண்டவர்களுக்கே நியமனங்கள் வழங்கப்படும் என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய இராணுவத் தளபதி – மேஜர் ஜெனரல் பொனிபொஸ் பெரேராவை நியமிக்குமாறு பிக்குகள் அழுத்தம்

சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதியின் நியமனம் தொடர்பான அறிவிப்பு, சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இருந்து இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜப்பானிய காவல்துறையினர் மீது இலங்கையர்கள் தாக்குதல் – சிறிலங்கா திருவிழாவில் சம்பவம்

ரோக்கியோவில் சிறிலங்கா தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் ஜப்பானிய காவல்துறையினர் சிலர் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு மாகாணசபையில் ஊழல் நடக்கவில்லை – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வடக்கு மாகாணசபையில் நிதி ஊழல்கள் இடம்பெற்றிருக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து கேட்டறிந்தார் அமெரிக்க தூதுவர்

அண்மையில் சிறிலங்காவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்பாக, அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், தேசிய கிறிஸ்தவ இவாஞ்சலிக்கல் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்கா கடற்படையை வலுப்படுத்த பிரான்ஸ் விருப்பம்

கடற்கொள்ளை மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கு, சிறிலங்காவுக்கு பிரான்ஸ் உதவும் என்று சிறிலங்காவுக்கான பிரெஞ்சு தூதுவர் ஜீன் மரின் சுப், தெரிவித்துள்ளார்.

மகிந்தவை அழைக்க வேண்டாம் என பாகிஸ்தானிடம் கோரியதாம் சிறிலங்கா

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின், பாகிஸ்தான் பயணத்தைத் தடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்ததாக, கூட்டு எதிரணியின் பேச்சாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.