மேலும்

நாள்: 20th June 2017

வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா பதவி விலகினார் – நெருக்கடி தணிகிறது

வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா இன்று மாலை பதவியில் இருந்து விலகும் கடிதத்தை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளித்துள்ளார்.

பிரெஞ்சு கடற்படையின் உயர் மட்டத் தளபதி சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் பேச்சு

பிரெஞ்சு கடற்படையின் கடல்சார்படையின் பிரதித் தளபதி றியர் அட்மிரல் ஒலிவர் லாபாஸ் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இன்று சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

அவைத் தலைவர் விவகாரம் வெடிக்காது – இணக்கப்பாட்டுடன் செயற்பட முடிவு

வடக்கு மாகாண அரசியலில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருந்த குழப்ப நிலை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், சபையை சுமுகமான முறையில் தொடர்ந்து நடத்திச் செல்வதில் கவனம் செலுத்தப்படும் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தில் பிரெஞ்சுப் போர்க்கப்பல்கள்

பிரெஞ்சு கடற்படையின் இரண்டு பாரிய போர்க்கப்பல்கள் நல்லெண்ணப் பயணமாக இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

ஆறு இராணுவப் புலனாய்வு அதிகாரிகளும் பிணையில் விடுதலை

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் ஆறு பேரும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

முன்னாள் புலனாய்வுத் தலைவரிடம் இன்றும் விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவுத் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம் இன்றும் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சிறிலங்கா படைகளுக்கு பயிற்சி அளிக்க கட்டுநாயக்க வந்துள்ள இந்திய கடற்படை விமானம்

சிறிலங்கா கடற்படை மற்றும் விமானப்படைக்குப் பயிற்சி அளிப்பதற்காக, இந்திய கடற்படையின் டோனியர் விமானம் ஒன்று நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

சிறிலங்காவுக்கு அதிக கொடைகளை வழங்கியது அமெரிக்கா – அதிக கடன்களை வழங்கியது சீனா

2016ஆம் ஆண்டில் சிறிலங்காவுக்கு அதிகளவு கொடைகளை வழங்கிய நாடாக அமெரிக்காவும், அதிகளவு கடன்களை வழங்கிய நாடாக சீனாவும் இருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

முன்கூட்டியே கொழும்பு துறைமுகத்தை விட்டு வெளியேறியது அமெரிக்க போர்க்கப்பல்

அனர்த்தத்துக்குப் பிந்திய உதவிப் பணிகளை மேற்கொள்வதற்காக சிறிலங்காவுக்கு வந்திருந்த அமெரிக்க போர்க்கப்பல், ஒரு வாரத்துக்கு முன்னதாகவே கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.

அவைத் தலைவர் விவகாரத்தில் புதிய சர்ச்சை வெடிக்கும் ஆபத்து

வடக்கு மாகாண அரசியலில் கடந்த ஒருவாரமாக ஏற்பட்டிருந்த குழப்ப நிலை முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்ற நிலையில், வடக்கு மாகாண அவைத் தலைவர் தொடர்பாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டிருக்கும் கருத்து, புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தக் கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.