மேலும்

நாள்: 13th June 2017

மகிந்தவின் சாரதி கப்டன் திஸ்ஸ கைது

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் முன்னாள் சாரதியான கப்டன் திஸ்ஸ விமலசேன நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

இந்த ஆண்டில் சிறிலங்காவுக்கு வரவுள்ள ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள்

இந்த ஆண்டில் சிறிலங்காவுக்கு ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்கள் பலர் பயணங்களை மேற்கொள்ளவுள்ளனர் என்று, ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்தார்.

சிறிலங்காவின் நீதித்துறை குறித்து ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் கடும் விமர்சனம்

சிறிலங்காவின் நீதி முறைமை தொடர்பாக, நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்களின் சுதந்திரம் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் மோனிகா பின்டோ தனது அறிக்கையில் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

ராடர்களால் கடற்படையினருக்கு பாதிப்பு வராதா? – சிறிதரனின் கேள்வியால் வாயடைத்த சுவாமிநாதன்

இரணைதீவு மக்களை மாற்று இடங்களில் குடியமர்த்துவது தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சரணடைந்தோர், கைதுசெய்யப்பட்டோர் விபரங்களை வெளியிடுமாறு கட்டளை- சிறிலங்கா அதிபர் வாக்குறுதி

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்தவர்கள் மற்றும், படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுமாறு முப்படையினர் மற்றும் சிறிலங்கா காவல்துறையினருக்கு இன்று கட்டளையிடுவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்துள்ளார்.

சிறிலங்காவின் துறைமுக அபிவிருத்தி குறித்து மகிந்த சமரசிங்கவுடன் இந்தியத் தூதுவர் பேச்சு

சிறிலங்காவின் துறைமுகங்கள், மற்றும் கப்பல் முறையை அபிவிருத்தி செய்வதில் இந்தியா எவ்வாறு உதவ முடியும் என்பது தொடர்பாக கொழும்பில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஹுசேன் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் – ஜெனிவாவில் முறையிடப் போகிறாராம் சரத் வீரசேகர

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனுக்கு எதிராக, ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தலைவரிடம் முறைப்பாடு ஒன்றைச் செய்யவுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் றியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அனர்த்தப் பகுதிகளில் உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கடற்படையினர்

அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் லேக் எரி கப்பலில், கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ள அமெரிக்க கடற்படையினர், சிறிலங்கா கடற்படையின் மரைன் படைப்பிரிவினருடன் இணைந்து, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சரவை மாற்றம் குறித்து முதலமைச்சர் தீவிர ஆலோசனை – முடிவை நாளை அறிவிப்பார்?

தம்மால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவினால் இரண்டு அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவையை மாற்றியமைப்பது குறித்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.