மேலும்

நாள்: 22nd June 2017

சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சி – பிரெஞ்சு போர்க்கப்பலின் தளபதி தெரிவிப்பு

சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளை ஒழுங்கு செய்யவுள்ளதாக பிரெஞ்சுக் கடற்படையின் மிஸ்ரால் கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் ஸ்ரனிஸ்லஸ் டி சார்கெரஸ் தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை – சுயவிபரக் கோவைகளை அனுப்ப முதல்வர் கோரிக்கை

வடக்கு மாகாணசபையில் வெற்றிடம் ஏற்பட்டுள்ள இரண்டு அமைச்சர் பதவிகளுக்கு நியமனங்களை செய்வதற்காக, அனைத்து மாகாணசபை உறுப்பினர்களிடம் இருந்தும் விண்ணப்பங்களைக் கோரியிருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

சுமுகமான சூழலில் வடக்கு மாகாணசபை அமர்வு – இரண்டு அமைச்சர்கள் மீதே புதிய விசாரணை

புதிதாக அமைக்கப்படும் விசாரணைக் குழு போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரனின் கீழ் உள்ள துறைகளிலும், சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் கீழ் உள்ள துறைகளிலும் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்தே விசாரணை நடத்தவுள்ளது.

ஜெனிவா பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்கும் குழுவில் ஓரம்கட்டப்பட்ட மங்கள

ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிப்பதற்கும் ஒருங்கிணைப்பதற்குமான பொறிமுறை ஒன்று சிறிலங்கா அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ளது.  இந்தக் குழுவில் சேர்த்துக் கொள்ளப்படாமல் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஓரம்கட்டப்பட்டுள்ளார்.

அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டை புதுப்பிக்க சிறிலங்கா விருப்பம்

அமெரிக்காவுடன் 2007ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட, பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டை புதுப்பித்துக் கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

காணாமல்போனோர் பணியக திருத்தச்சட்டம் ஒரு மனதாக நிறைவேறியது

காணாமல்போனோர் பணியகத்தை உருவாக்குதல், நிர்வகித்தல் மற்றும் செயற்பாடுகளை நீக்குதல் தொடர்பான திருத்தச்சட்டம் நேற்று சி்றிலங்கா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் சம்பந்தன் நீண்ட பேச்சு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்கா நாணய மதிப்பு வரலாறு காணா வீழ்ச்சி – டொலரின் மதிப்பு 155 ரூபாவைக் கடந்தது

வரலாற்றில் முதல் முறையாக, அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 155 ரூபாவைத் தாண்டியுள்ளது.

கருணைக் கொலை செய்து விடுங்கள் – தமிழ்நாடு முதல்வருக்கு ரொபேர்ட் பயஸ் கடிதம்

தம்மைக் கருணைக் கொலை செய்து, உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்து விடுமாறு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கும், ரொபேர்ட் பயஸ், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.