மேலும்

நாள்: 21st June 2017

முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப்பெற்றது தமிழ் அரசுக் கட்சி

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக ஆளுனரிடம் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள் மீளப் பெற்றுள்ளனர்.

கல்வி, விவசாய அமைச்சுக்களைப் பொறுப்பேற்றார் விக்னேஸ்வரன்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று பிற்பகல், ஆளுனர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் கல்வி மற்றும் விவசாய அமைச்சுப் பொறுப்புக்களையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

27 வயதில் ஐ.நா பொதுச்செயலரின் தூதுவராகிறார் சிறிலங்கா பெண்

சிறிலங்காவைச் சேர்ந்த ஜெயத்ம விக்கிரமநாயக்க ஐ.நா பொதுச்செயலரின் இளையோர் விவகாரங்களுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

11 தமிழர்கள் கடத்தப்பட்ட வழக்கில் மற்றொரு சிறிலங்கா கடற்படைச் சிப்பாய் கைது

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, மேலும் ஒரு சிறிலங்கா கடற்படைச் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டாரில் உள்ள இலங்கையர்களை வெளியேற்றும் திட்டம் இல்லை

கட்டாரில் உள்ள இலங்கையர்களை அவசரமாக வெளியேற்றும் திட்டம் ஏதும் இல்லை என்று கொழும்பில் உள்ள கட்டார் தூதரகம் தெரிவித்துள்ளது. கட்டாரில் சுமார் ஒன்றரை இலட்சம் இலங்கையர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தார் ஞானசார தேரர்

கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக மறைந்திருந்த பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று வெளியே வந்து நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

பிரெஞ்சுப் போர்க்கப்பலில் சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

நல்லெண்ணப் பயணமாக கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ள பிரெஞ்சுப் போர்க்கப்பல்களை, சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன நேற்று பார்வையிட்டார்.

காணாமல்போனோருக்கான பணியகம் மிகவும் அவசியம் – அமெரிக்க தூதுவர்

காணாமல் போனோருக்கான பணியகம் மிகவும் அவசியமானது என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் நேற்று கிழக்கு மாகாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

ஐ.நா நிபுணரின் அறிக்கை நாட்டின் இறைமையை மீறுகிறது – சிறிலங்கா பாய்ச்சல்

ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் மோனிகா பின்டோ, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கை, சிறிலங்காவின் இறைமையை மீறியுள்ளதாக சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.