மேலும்

நாள்: 6th June 2017

இந்தியப் பிரதமரைச் சந்தித்தார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று மாலை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தியப் பிரதமரைச் சந்திக்க புதுடெல்லி விரைந்தார் சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்துவதற்காக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, இன்று புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இணங்கவில்லை – மங்கள சமரவீர

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் சிறிலங்கா தொடர்பாக சமர்ப்பித்த அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் உடன்படவில்லை என்று சிறிலங்காவின் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

அமெரிக்க சிறப்புப் படைப்பிரிவினால் சிறிலங்கா கடற்படைக்கு பயிற்சி

அமெரிக்க இராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவினால், சிறிலங்கா கடற்படையினருக்கு திருகோணமலையில் வைத்து சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. கூட்டு ஒருங்கிணைந்த பரிவர்த்தனை பயிற்சித் திட்டத்தின் கீழ் பலன்ஸ் ஸ்ரைல் 2017/1 என்ற பெயரில் இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

33 ஆண்டுகளுக்குப் பின்னர் வடக்கில் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது சுங்கப் பணியகம்

33 ஆண்டுகளுக்குப் பின்னர் வடக்கில் சிறிலங்கா சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள் இந்த மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா படைகளுக்கு கருவிகள், தொழில்நுட்பங்களை வழங்க அமெரிக்கா இணக்கம்

சிறிலங்காவில் அண்மைய அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை  மீளக் கட்டியெழுப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா படையினருக்கு, அமெரிக்கா ஆதரவையும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்க முன்வந்துள்ளது.

கட்டாருடன் இராஜதந்திரத் தொடர்புகளை துண்டித்துள்ள அரபு நாடுகள் – சிறிலங்காவுக்கும் நெருக்கடி

இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புகளை வைத்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கட்டாருடன், இராஜதந்திரத் தொடர்புகளைத் துண்டிப்பதாக ஐந்து மத்திய கிழக்கு நாடுகள் அறிவித்துள்ள நிலையில், சிறிலங்காவும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.

பளை துப்பாக்கிச் சூடு- சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி பிணையில் விடுதலை

பளையில் சிறிலங்கா காவல்துறையினரின் ரோந்து வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி உடனடியாகவே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த மாதம் பங்களாதேஷ் செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்தமாதம் பங்களாதேசுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான உலங்குவானூர்தியை சேவையில் இருந்து நீக்குகிறது சிறிலங்கா விமானப்படை

வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, தொழில்நுட்பக் கோளாறினால் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட போது பலத்த சேதமடைந்த எம்.ஐ.17 உலங்குவானூர்தி சேவையில் இருந்து முற்றாக நீக்கப்படும் என்று சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.