மேலும்

பளை துப்பாக்கிச் சூடு- சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி பிணையில் விடுதலை

gavelபளையில் சிறிலங்கா காவல்துறையினரின் ரோந்து வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி உடனடியாகவே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பளை- கச்சார்வெளியில் கடந்த மாதம் 19ஆம் நாள் அதிகாலையில் சிறிலங்கா காவல்துறையினரின் ரோந்து வாகனம் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச் சூடு தொடர்பாக, உரும்பிராயில் வைத்து கடந்த 3ஆம் நாள் மாலையில் முன்னாள் போராளி ஒருவரை கைது செய்யப்பட்டார்.

பெரியபரந்தனைச் சேர்ந்த முன்னாள் கடற்புலிப் போராளியான கிருபானந்தமூர்த்தி விஜயகணேசன் (வயது-32) என்பவரைக் கைது செய்த தீவிரவாத விசாரணைப் பிரிவினர், வவுனியாவுக்குக் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, நேற்றுமுன்தினம் மாலை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேகநபரை காவல்துறையினர் முன்னிறுத்தினர். இதன்போது சந்தேக நபரை பிணையில் செல்ல நீதிவான் அனுமதி அளித்தார்.

கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளி, போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறிலங்கா படையினருடன் இணைந்து செயற்பட்டு வந்தவர் என்று சிறிலங்கா காவல்துறையினரை மேற்கோள்காட்டும் செய்தி ஒன்று கூறுகிறது.

ஒரு கருத்து “பளை துப்பாக்கிச் சூடு- சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி பிணையில் விடுதலை”

  1. vikki says:

    former ltt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *