நாடாளுமன்ற உறுப்பினர்களில் 94 பேர் கபொத சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாதவர்கள்
சிறிலங்கா நாடாளுமன்றத்தில், அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களில் 94 பேர் கபொத சாதாரண தரப் பரீட்சையில் கூட சித்தியடையாதவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில், அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களில் 94 பேர் கபொத சாதாரண தரப் பரீட்சையில் கூட சித்தியடையாதவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆறு நாட்கள் பயணமாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா நேற்று நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவைச் சென்றடைந்தார்.
சிறிலங்கா மாலுமிகளுடன் இந்தியப் பெருங்கடலில் பயணித்த எண்ணெய்க் கப்பல் ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களினால், கடத்தப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் இலங்கை மாலுமிகள் எட்டுப் பேர் இருந்தனர் என்று சிறிலங்கா கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.
ஜப்பானியக் கடற்படையின் மிகப்பெரிய உலங்குவானூர்தி தாங்கி, நாசகாரிப் போர்கப்பலான இசுமோ, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் தீர்மானத்துக்கு, இணை அனுசரணை வழங்குவது சிறிலங்கா அரசாங்கத்தின் பலவீனம் என்று குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.
தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பயுங் சே நாளை சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். தென்கொரியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு அவரது இந்தப் பயணம் அமையவுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பௌத்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக இந்தியா செல்வதற்குத் திட்டமிட்டுள்ளார் என்று ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகிய செய்தியை சிறிலங்கா அதிபர் செயலகம் நேற்று மறுத்துள்ளது.
பாக்கு நீரிணையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா கடற்படையை நியாயப்படுத்தும் வகையில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங்கிடம் கருத்து வெளியிட்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பாக, அவுஸ்ரேலியாவில் வசிக்கும் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்வதற்கு அனைத்துலக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா தொடர்பான தீர்மான வரைவு இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின் தொடர்ச்சியாக இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.