மேலும்

நாடாளுமன்ற உறுப்பினர்களில் 94 பேர் கபொத சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாதவர்கள்

parliamentசிறிலங்கா நாடாளுமன்றத்தில், அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களில் 94 பேர் கபொத சாதாரண தரப் பரீட்சையில் கூட சித்தியடையாதவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்  பேராசிரியர் எம்.ஒ.ஏ டி சொய்சா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

225 உறுப்பினர்களைக் கொண்ட சிறிலங்கா நாடாளுமன்றத்தில், 25 உறுப்பினர்கள் மாத்திரமே பட்டதாரிகள் என்றும், 94 பேர்  கபொத சாதாரண தரப்பரீட்சையில் கூட சித்தியடையாதவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மக்களால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கௌரவத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அவர் கேட்டுக் கொண்டார்.

நாடாளுமன்றத்தில் குழப்பம் விளைவித்து, அநாகரீகமாக நடந்து கொள்வதாகவும், இதனால் பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும் அவர் விசனம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *