மேலும்

நேபாளத்தில் சிறிலங்கா இராணுவத் தளபதி

Sri-Lanka-army commander in nepalஆறு நாட்கள் பயணமாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா நேற்று நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவைச் சென்றடைந்தார்.

நேபாள இராணுவத் தளபதி ராஜேந்திர செட்ரியின் அழைப்பின் பேரிலேயே சிறிலங்கா இராணுவத் தளபதியின் இந்தப் பயணம் அமைந்துள்ளது.

காத்மண்டு திரிபுவன் விமான நிலையத்தில் சிறிலங்கா இராணுவத் தளபதியை மேஜர் ஜெனரல் பினோத் குமார் சிரெஸ்தா வரவேற்றார்.

Sri-Lanka-army commander in nepal

இந்தப் பயணத்தின் போது, நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி, பிரதமர் புஷ்பா கமல் தால், மற்றும் பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ணகாந்த் ஆகியோரையும் சிறிலங்கா இராணுவத் தளபதி சந்திக்கவுள்ளார்.

அத்துடன், நேபாள இராணுவத்தின் மேற்கு டிவிசன் தலைமையகமான பொக்காராவுக்கும் அவர் செல்லவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *