மேலும்

மாதம்: March 2017

கோத்தாவினால் மைத்திரியை வெற்றி கொள்ள முடியாது – இசுரு தேவப்பிரிய

அடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா அதிபர் மைத்தி்ரிபால சிறிசேனவே வெற்றி பெறுவார் என்றும்,  கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்த சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு

சிறிலங்கா படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்துவதற்கு, சிறிலங்காவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் யு.ஆர்.டி .சில்வா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

நாட்டைப் பிரிக்க அனுமதியேன் – சிறிலங்கா பிரதமர்

தாம் ஒருபோதும் நாட்டைப் பிரிக்க அனுமதிக்கமாட்டேன் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு- மருதானையில் நேற்று புத்தர் சிலை ஒன்றை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

உண்மையான போர் வீரர்களை குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாப்பேன் – சிறிலங்கா அதிபர் உறுதி

உண்மையான போர் வீரர்களை போருடன் தொடர்புடைய மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாப்போம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசு- 2017 : போட்டி முடிவுகள்

கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவாக, காக்கைச் சிறகினிலே இதழ் சார்பில் நடத்தப்பட்ட புலம்பெயர் இலக்கியப் பரிசு- 2017 போட்டியில், புலம்பெயர் இணைய வலைப்பதிவர் தேர்வு  முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அமெரிக்காவின் பசுபிக் சிறப்பு நடவடிக்கை தளபதி சிறிலங்கா பிரதமருடன் பேச்சு

அமெரிக்காவின் பசுபிக் சிறப்பு நடவடிக்கை கட்டளைப் பணியகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் பிரயன் பென்டன் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, முக்கிய சந்திப்புகளை நடத்தியுள்ளார்.

கோட்டே தொடருந்து நிலைய குண்டுவெடிப்பு – தேவதாசனுக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை

கொழும்பு- கோட்டே தொடருந்து நிலையத்தில், நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்தார் என்று குற்றம்சாட்டப்பட்ட கனகசபை தேவதாசனுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றார் மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க

சிறிலங்கா இராணுவத்தின் 50 ஆவது தலைமை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இன்று அதிகாரபூர்வமாகப் பதவியேற்றார்.

அம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்குவது இந்தியாவுக்கு பாரிய அச்சுறுத்தல் – ஜி.பார்த்தசாரதி

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் சிறிலங்கா கையளிக்கவுள்ளதானது, இந்தியாவுக்குப் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்று, புதுடெல்லியைத் தளமாக கொண்ட கொள்கை ஆய்வுக்கான நிலையத்தின் வருகை பேராசிரியரான ஜி.பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.