மேலும்

பிரான்சில் தைப் பொங்கல் விழா – புலம்பெயர் தமிழர் திருநாள் 2017

paris-pongalபிரான்சில் தைப்பொங்கல் விழா – புலம்பெயர் தமிழர் திருநாள் 2017 இம்முறை பாரீசு பெரு நகர மையத்திலமைந்துள்ள 20வது நகரசபை வளாகத்தில் (கம்பெத்தா) நடைபெறுகிறது.

வேற்றுமையில் ஒருத்துவம் கொள்ளும் தனித்துவ நாளாக – தமிழர் திருநாளாக- தமிழரின் அடையாள நாளாக ‘புலம்பெயர் தமிழர் திருநாளாக” பிரான்சில் மக்களரங்காகப் பதினொராவது தடவையாகத் தொடரப்படுகிறது.

புலம்பெயர் தமிழர் திருநாள் – 2017′ பிரான்சில் பதினொராவது நிகழ்வரங்காகிறது. இம்முறை பாரீசு நகரின் மையத்தில் அமைந்த பாரீசு – 20 நகரசபை முன்றலில் நடைபெறுவதானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக தடமிடுகிறது.

தமிழர்களது புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியில் தமிழர் பண்பாட்டு நிகழ்வு இங்கு நடப்பதானது பாரீசு நகரின் பன்மைத்துவ அடையாள அங்கீகாரமாகவே கொள்ளல் பொருத்தமாகும்.

paris-pongal

புலம்பெயர் தமிழர் திருநாள் – 2017 இம்முறை, வரும் ஜனவரி 13ஆம் நாள் 16.30 தொடக்கம் 19.00 மணிவரை ஆய்வரங்காகவும், ஜனவரி 14ஆம் நாள் 10.30 தொடக்கம் 18.30 மணிவரை நிகழ்வரங்காகவும் Mairie de Paris – 20ème arrondissement, 6 Place Gambetta, 75020 Paris Cedex 20 (Arrêt: Gambetta – Métro 3) என்ற முகவரியில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வுகளில், கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் மௌனகுரு, ஓவியர் மருது, ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும், சிறப்புப் பங்கேற்பாளர்களாக கவிதா லட்சுமி, சுஜித் ஜி, சந்தோஸ் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

பல்வேறு கலைக் குழுக்களின் நிகழ்வுகள், பொங்கலிடல், கோலமிடல், கண்காட்சி, அகரம் எழுதுதல் உள்ளிட்ட நிகழ்வுகளையும் கொண்டதாக இம்முறை புலம்பெயர் தமிழர் திருநாள் அமையவுள்ளது.

இந்த நிகழ்வில் அனைவரையும் பங்கேற்குமாறு ஏற்பாட்டுக்குழுவின் சார்பில், சிலம்பு சங்கத்தின் ஏற்பாட்டாளர் க.முகுந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *