மேலும்

மாதம்: November 2016

சிறிலங்கா பாதுகாப்புச் செயலரை சந்தித்தார் இந்திய கடற்படைத் தளபதி

சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா, சிறிலங்கா பாதுகாப்புச் செயலரைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சிறிலங்காவின் முப்படைத் தளபதிகளுடன் அமெரிக்க பசுபிக் கட்டளை தளபதி பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் தளபதி அட்மிரல் ஹரி ஹரிஸ், நேற்று சிறிலங்காவின் முப்படைகளின் தளபதிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

கூட்டுப் பயிற்சி: இந்தியா – சிறிலங்கா இடையே விரைவில் புரிந்துணர்வு உடன்பாடு

கூட்டுப் பயிற்சிகளை நடத்துவது தொடர்பாக சிறிலங்காவுடன், இந்திய கடலோரக் காவல்படை புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ளவுள்ளது. இந்திய கடலோரக் காவல்படை பணிப்பாளர் நாயகம் ராஜேந்திர சிங் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

சீனாவினதும், இந்தியாவினதும் உதவி தேவை – சிறிலங்கா

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு சீனாவினதும், இந்தியாவினதும் உதவி தேவைப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி றியர் அட்மிரல் டிடியர் பிளேட்டன், சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சீன நிறுவனத்தின் நிபந்தனைகளை சிறிலங்கா நிராகரிப்பு

அம்பாந்தோட்டை – மத்தல விமான நிலையத்தின் அபிவிருத்தி செய்வதற்கு சீனாவினால் பரிந்துரைக்கப்பட்ட தரப்பின், நிபந்தனைகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காலி கலந்துரையாடலைத் தொடங்கி வைத்தார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து கடற்படை நடத்தும் கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கான, காலி கலந்துரையாடல் இன்று கொழும்பிலுள்ள கோல்பேஸ் விடுதியில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வட்டி வீதங்களால் முட்டிக் கொள்ளும் சீனாவும் சிறிலங்காவும்

அனைத்துலக சமூகமானது அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பின் அதிர்ச்சிகரமான வெற்றி தொடர்பாக கவனம் செலுத்திய அதேவேளையில், பிறிதொரு அதிகாரத்துவ நாடான சீனா, சிறிய நாடான சிறிலங்காவுடன் நிதி தொடர்பாக முரண்பட்டுள்ளது.

ஞானசார தேரரை சிறிலங்காவுக்கே திருப்பி அனுப்பிய இந்திய குடிவரவு அதிகாரிகள்

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர், விமான நிலையத்தில் இந்திய குடிவரவு அதிகாரிகளால் மீண்டும் சிறிலங்காவுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.

அமெரிக்காவின் பசுபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் ஹரிஸ் சிறிலங்கா பிரதமருடன் பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் பசுபிக் கட்டளை பீடத்தின் தளபதி, அட்மிரல் ஹரி ஹரிஸ், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.