மேலும்

நாள்: 23rd November 2016

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரி கைது

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரியான, பிரதி காவல்துறைமா அதிபர் கே.எல்.எம்.சரத்சந்திர கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்காவின் மரைன் படைப்பிரிவுக்கு அமெரிக்க மரைன் படையினர் பயிற்சி

சிறிலங்கா கடற்படையினால் அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மரைன் படைப்பிரிவுக்கு அமெரிக்க கடற்படையின் மரைன் படையினர் பயிற்சி அளிப்பதாக சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

இந்தியாவைத் தாக்கி விட்டு சீனாவுக்குப் பறக்கிறார் மகிந்த

இந்தியா மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து விட்டு சீனப் பயணத்தை ஆரம்பித்திருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு படையினரைப் பயன்படுத்த வேண்டாம்- சிறிலங்கா கடற்படைத் தளபதி

குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு சிறிலங்கா படையினரைப் பயன்படுத்திக் கொள்ளாதீர்கள் என்று, சிறிலங்கா கடற்படைத் தளபதி , ரவீந்திர விஜேகுணவர்த்தன கேட்டுக் கொண்டுள்ளார்.

நீரிழிவு சிகிச்சைக்கு அமெரிக்கா செல்ல அனுமதி கேட்கிறார் பசில் – ராஜபக்சகளின் திருகுதாளங்கள்

நீரிழிவு நோய்க்கு மருத்துவ உதவியைப் பெறுவதற்கு அமெரிக்கா செல்வதற்கு மூன்று மாத அனுமதியைத் தர வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச  நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் அவுஸ்ரேலிய எல்லைக் காவல் படை ஆணையாளர் பேச்சு

அவுஸ்ரேலிய எல்லைக் காவல் படை ஆணையாளர், ரோமன் குவாட்வ்லீக் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவைச் சந்தித்து, பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்காமல் தப்பிக்க சிறிலங்கா முயற்சி – அமெரிக்க நிபுணர் சந்தேகம்

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தை அமைத்தல் உள்ளிட்ட, நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளை உருவாக்குவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் தாமதித்து வருவதானது, போரில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு உண்மை மற்றும் நீதியை வழங்குவதை தவிர்க்கும் முயற்சியாக இருக்கக் கூடும் என்று போர்க்குற்ற விவகாரங்களுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் தெரிவித்துள்ளார்.

திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்கப் போர்க்கப்பல்

அமெரிக்க கடற்படையின் அன்ரனியோ வகையைச் சேர்ந்த, ஈரூடக போக்குவரத்துக் கப்பலான, யுஎஸ்எஸ் சோமசெற், USS Somerset (LPD-25) திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்துள்ளது.

புலிகள் மீதுள்ள சிங்கள மக்களின் வைராக்கியமே வடக்கு மக்கள் மீது குறை கூறுவதற்குக் காரணம்

விடுதலைப் புலிகள் தொடர்பாக சிங்கள மக்கள் மனதில் காணப்படும் வைராக்கியமே, வடக்கு மக்கள் எதனை செய்தாலும் அவர்கள் குறை சொல்லுவதற்குக் காரணம் என்று  வடக்கு மாகாண முதலமைச்சர்  சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.