மேலும்

நாள்: 16th November 2016

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் கையளிக்கும் உடன்பாடு ஜனவரியில் கைச்சாத்து

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திடம் கையளிப்பது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு விரைவில் இறுதிப்படுத்தப்படும் என்று சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் அபிவிருத்தி மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்தார்.

ஆவா குழு சந்தேகநபர்கள் 11 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெனிவாவில் ஐ.நா குழுவின் விசாரணைகளால் திணறிய சிறிலங்கா பிரதிநிதிகள்

சிறிலங்கா இராணுவம், காவல்துறையினால் இழைக்கப்பட்ட சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள், பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றாக உருவாக்கப்படும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் உள்ளடக்கம் குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவில் நேற்று கடுமையான கேள்விகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.

சிறிலங்கா புலனாய்வு தலைவரை ஐ.நா குழு விசாரிக்க வேண்டும் – ஊடக அமைப்புகள் கோரிக்கை

ஜெனிவாவில் நடைபெறும் சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் 59 ஆவது கூட்டத்தொடரில், சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ், சிறிலங்காவில் சார்பில் பங்கேற்பது குறித்து ஆர்எஸ்எவ் எனப்படும் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பும், ஜேடிஎஸ் எனப்படும் சிறிலங்காவின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளன.

வட,கிழக்கின் முன்னாள் இராணுவ ஆளுனர்கள் எழுதிய நூலை வெளியிட்டார் மகிந்த

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆளுனர்களாக இருந்த முன்னாள் படை அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, மற்றும் றியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம ஆகியோர் இணைந்து எழுதிய நூலை, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று வெளியிட்டு வைத்தார்.

சிறிலங்காவில் ஆட்சி மாறினாலும் வெள்ளைவான் கடத்தல் தொடர்கிறது – ஐ.நா குழு

சிறிலங்காவில் கடந்த ஆண்டு புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த போதிலும், வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்கின்றன என்று சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் துணைத் தலைவர் பெலிஸ் காயர் தெரிவித்துள்ளார்.