மேலும்

நாள்: 6th November 2016

பிரிகேடியர் சுரேஸ் சாலியின் கீழ் செயற்பட்ட இரண்டு இராணுவப் புலனாய்வு பிரிவுகள் கலைப்பு

இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் பதவியில் இருந்து, பிரிகேடியர் சுரேஸ் சாலி நீக்கப்பட்டதையடுத்து. இராணுவப் புலனாய்வுப் பணியகத்தின் கீழ் செயற்பட்ட இரண்டு பிரிவுகள் கலைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் மூன்று கோரிக்கைகள் – நிராகரித்தது சிறிலங்கா

மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இந்தியத் தரப்பில் முன்வைக்கப்பட்ட மூன்று கோரிக்கைகளை சிறிலங்கா அமைச்சர்கள் நிராகரித்து விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனத் தூதுவருக்கு அழைப்பாணை அனுப்பவுள்ளார் மங்கள சமரவீர – முற்றுகிறது முறுகல்

சிறிலங்கா அரசாங்கத்தின் ஆழ்ந்த அதிருப்தியை வெளிப்படுத்துவதற்காக, சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங்கிற்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அழைப்பாணை விடுக்கவுள்ளார்.

சிறிலங்கா அதிபர் இன்று மீண்டும் இந்தியா பயணம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இன்று பிற்பகல் அவர் புதுடெல்லியை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்னேஸ்வரனை முதல்வராக்கியது சரியான முடிவு தான்- இரா.சம்பந்தன்

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்கு சி.வி.விக்னேஸ்வரனை முன்னிறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவு இன்றைக்கும் சரியானதே, என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பை உடைக்கமாட்டேன் – சம்பந்தன் முன் விக்னேஸ்வரன் உறுதிமொழி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கமாட்டேன் என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்பாக, பொது அரங்கில் உறுதியளித்துள்ளார் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

‘காலைக்கதிர்’ : யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவருகிறது புதிய நாளிதழ்

யாழ்ப்பாணத்தில் இருந்து காலைக்கதிர் என்ற புதிய நாளிதழ் இன்று முதல் வெளிவர ஆரம்பித்துள்ளது. மூத்த ஊடகவியலாளர் கானமயில்நாதனை பிரதம ஆசிரியராகக் கொண்டு, மற்றொரு மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரன் இந்த நாளிதழை வெளியிடுகிறார்.