மேலும்

நாள்: 27th November 2016

தமிழர் தாயகமெங்கும் மாவீரர்களுக்கு நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டன

தமிழீழத் தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள் இன்று தமிழர் தாயகத்திலும், தமிழர்கள் வாழும் தேசங்களிலும் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டனர்.

இந்தியக் கடற்படைத் தளபதி இன்று சிறிலங்கா பயணம்

இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். வரும் வியாழக்கிழமை வரை அவர் கொழும்பில் தங்கியிருப்பார் என்று புதுடெல்லி செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழர் தாயகத்தில் பரவலாக மாவீரர் நாள் நிகழ்வுகள் – காலையிலேயே தொடங்கியது

தமிழீழ மாவீரர் நாளை முன்னிட்டு இன்று தமிழர் தாயகப் பகுதிகளில் பரவலாக நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. சிறிலங்கா அரசாங்கத்தின் எச்சரிக்கையையும் மீறி வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் மக்கள் இன்று காலை பல்வேறு மாவீரர் நாள் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தி நடத்தியிருந்தனர்.

சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தீர்வே மாவீரர்கள் கனவை நனவாக்கும்! – ருத்ரகுமாரன்

சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஏற்பாடு ஒன்றே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக அமைய முடியும். அதற்கென உழைப்பதையே மாவீரர்கள் கனவை நனவாக்கும் என்று, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் வெளியிட்டுள்ள மாவீரர் நாள் செய்தியில் தெரிவிததுள்ளார்.

சிறிலங்கா குறித்த ஐ.நாவின் நிலைப்பாடு மாறாது – பர்ஹான் ஹக்

போருடன் தொடர்புடைய சம்பவங்கள் குறித்த விசாரணைகள் விடயத்தில் ஐ.நாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது என்று ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

அதிரடிப்படை முன்னாள் கட்டளைத் தளபதி கைது – சிறிலங்கா அதிபர் அதிருப்தி

சிறிலங்கா காவல்துறை சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரியான பிரதி காவல்துறை மா அதிபர் கே.எல்.என்.சரத்சந்திர கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

“ மனித உரிமை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவியுங்கள்”- ட்ரம்பிடம் தஞ்சமடையும் சிறிலங்கா அதிபர்

மனித உரிமை குற்றச்சாட்டுகளில் இருந்து சிறிலங்காவை விடுவிக்குமாறு, அமெரிக்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

காவல்துறை தடைகளை மீறி தீபம் ஏற்ற தயாராகிறது கூட்டமைப்பு – கொழும்பு ஆங்கில வாரஇதழ்

சிறிலங்கா காவல்துறை உத்தரவுகளை மீறி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள், இன்று மாவீரர் நாள் நிகழ்வுகளை பல்வேறு இடங்களில் நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்து வருவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மலேசியா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் பயணமாக மலேசியாவுக்குச் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த மாதம் 14ஆம் நாள், சிறிலங்கா அதிபரின் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.

விதையாக வீழ்ந்தோரின் நினைவில்

மாவீரர் நாள்…..! உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசிய இனத்தின் தமிழீழ விடுதலைத் தாகம் தணிப்பதற்காக, தமதுயிரைக் கூடத் துச்சமென எண்ணி உயிர் கொடுத்தவர்களை நினைவு கூரும் நாள் இன்று.