மேலும்

நாள்: 15th November 2016

அமெரிக்காவின் புதிய இராஜாங்கச் செயலர் அடுத்த ஆண்டு சிறிலங்கா வருவார்

அமெரிக்காவின் புதிய இராஜாங்கச் செயலர், அடுத்த ஆண்டில் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்வார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஆவா குழுவில் 62 பேர், 38 பேர் இதுவரை கைது – நாடாளுமன்றில் தகவல்

வடக்கில் குழப்ப நிலையை ஏற்படுத்தும் நோக்கில் செயற்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்த 38 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஆவா குழு சந்தேகநபர்களில் ஒருவர் இராணுவத்தில் பணியாற்றியவர் – ஒப்புக்கொண்டது அரசாங்கம்

யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்தவர்களில் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து தப்பிஓடிய ஒருவரும் உள்ளடங்குவதாக சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.

காணாமற்போனோர் செயலகம் ஜனவரி 1 இல் செயற்படத் தொடங்கும்

காணாமற்போனோர் தொடர்பான செயலகம் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் நாள் தொடக்கம் செயற்படத் தொடங்கும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அமெரிக்கர்கள் சிறிலங்காவை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் – உதய கம்மன்பில

அதிபர் தேர்தலின் முடிவுகளை ஏற்றுக் கொண்ட, சிறிலங்காவை அமெரிக்கா முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா படையினரின் மரபணுவில் சித்திரவதைகள், கடத்தல்கள் ஊறியுள்ளது – யஸ்மின் சூகா

சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா ஆணைக்குழு , சிறிலங்காவின் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட வேண்டும் என்றும், சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்படும் கடத்தல்கள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் குறித்து சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்,  அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் தலைவராகன யஸ்மின் சூகா கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரே ஆண்டில் சிறிலங்கா கடற்படை ஈட்டிக் கொடுத்த 2.33 பில்லியன் ரூபா வருமானம்

வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சேவையை பொறுப்பேற்ற ஒரு ஆண்டு காலத்தில், சிறிலங்கா கடற்படை 2.33 பில்லியன் ரூபாவை வருமானத்தைப் பெற்றிருப்பதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதரகம் மீது கல்வீசித் தாக்குதல்

கொழும்பில் உள்ள முன்னணி வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றின் மீது கல்வீச்சு நடத்தப்படுவதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.