மேலும்

நாள்: 3rd November 2016

லசந்தவின் தொலைபேசியை ஒட்டுக்கேட்க கோத்தா உத்தரவு – அம்பலமான இரகசிய ஆவணம்

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்படுவதற்கு சில மாதங்கள் முன்னதாக, அவரது கைத்தொலைபேசி உரையாடல்களைக் கண்காணிக்குமாறு சிறிலங்கா பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டிருந்தார் என்பது, அரச புலனாய்வுச் சேவை இரகசிய ஆவணம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

மாணிக்க மடு புத்தர் சிலையை அகற்ற பௌத்த பிக்குகள் மறுப்பு

அம்பாறை மாவட்டத்தில் தமிழ்ப் பேசும் மக்கள் செறிவாக வாழும் இறக்காமம் பகுதியில் மாணிக்கமடு கிராமத்தின் அருகே, மாயக்கல்லி மலை மீது அத்துமீறி வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுவதற்கு பௌத்த பிக்குகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

ராஜித சேனாரத்னவின் குற்றச்சாட்டை மறுக்கிறார் ‘ஆவா’ குழுவின் ‘பிதாமகன்’ கோத்தா

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவே வடக்கில் ‘ஆவா’ குழுவை உருவாக்கினார் என்று சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ள குற்றச்சாட்டை, கோத்தாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

ஆவா குழுவை கோத்தாவே உருவாக்கினார் – அமைச்சர் ராஜித தகவல்

வடக்கில் செயற்படும் ஆவா குழுவை சில இராணுவ அதிகாரிகளின் உதவியுடன் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தான் உருவாக்கினார் என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.