மேலும்

நாள்: 8th November 2016

பிரகீத் கடத்தல் வழக்கில் கைதான அனைத்து புலனாய்வு அதிகாரிகளும் பிணையில் விடுவிப்பு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த மேலும் இரண்டு சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் இன்று அவிசாவளை மேல் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஊடகங்கள் மூலம் பேசக் கூடாது – சீனத் தூதுவருக்கு சிறிலங்கா ‘குட்டு’

சிறிலங்கா அரசாங்கம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட சீனத் தூதுவருடன், சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் எசல வீரக்கோன், தொலைபேசி மூலம் உரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் இன்று அதிபர் தேர்தல் – வெற்றி பெறுவாரா ஹிலாரி?

அமெரிக்காவின் 58 ஆவது அதிபர் தேர்தல் இன்று  நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனுக்கும், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில் கடுமையான நேரடிப் போட்டி நிலவுகிறது.

சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முனைகிறதா சீனா?

சீனத் தூதுவர் வழமைக்கு மாறாக சிறிலங்காவின் நிதி அமைச்சர் மற்றும் சிறிலங்காவின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சித்தமையானது கொழும்பில் ஆட்சி மாற்றம் ஒன்றை சீனா எதிர்பார்ப்பதற்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் பலரும் உற்றுநோக்குகின்றனர்.

இந்திய- சிறிலங்கா இராணுவத்தினர் பங்கேற்ற மித்ரசக்தி கூட்டுப் போர்ப்பயிற்சி நிறைவு

இந்திய- சிறிலங்கா இராணுவத்தினர் பங்கேற்ற மித்ரசக்தி கூட்டுப் போர்ப்பயிற்சி நேற்று முன்தினத்துடன் நிறைவுக்கு வந்துள்ளது.  கூட்டுப் பயிற்சி நிறைவு நிகழ்வு, அம்பேபுஸ்ஸவில் உள்ள சிங்க ரெஜிமென்ட் தலைமையகத்தில் இடம்பெற்றது.

மகிந்தவுக்கு சீனா அழைப்பு – இம்மாதம் பீஜிங் செல்கிறார்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இந்த மாத பிற்பகுதியில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று கூட்டு எதிரணி வட்டாரங்களை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆவா குழு வேட்டையில் சிறிலங்கா படைச் சிப்பாயும் சிக்கினார்

யாழ்ப்பாணத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக, ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் எட்டுப் பேர் வரையில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.