மேலும்

நாள்: 9th November 2016

புதிய அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு சிறிலங்கா அதிபர், பிரதமர் வாழ்த்து

அமெரிக்காவின் 45 ஆவது அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் மூன்று ஆவா குழு சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணத்தில் ஆவா குழு என்ற பெயரில் குழப்பம் விளைவிக்க முயன்றவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மேலும் மூன்று இளைஞர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதிவான நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி – ஹிலாரி அதிர்ச்சித் தோல்வி

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் எதிர்பாராத வெற்றியைப் பெற்றுள்ளார். இந்த தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட- ஜனநாயக கட்சியின் வேட்பாளரான முன்னாள்  இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன் அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை

அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில், டொனால்ட் ட்ரம்புக்கும் ஹிலாரி கிளின்டனுக்கும் இடையில் கடுமையான இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

ஆவா குழு சந்தேகநபர்கள் மூவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிமன்றம் உத்தரவு

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மூவர் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

சீனத் தூதுவரின் கருத்தை நியாயப்படுத்துகிறது சீன வெளிவிவகார அமைச்சு

சிறிலங்கா தொடர்பாக சீனத் தூதுவர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தை சீன வெளிவிவகார அமைச்சு நியாயப்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் – முந்தினார் ஹிலாரி

அமெரிக்காவில் நேற்று நடந்த அதிபர் தேர்தலின் முதல் கட்ட முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் முன்னிலை வகிப்பதாக பிந்திய முடிவுகள் கூறுகின்றன. (காலை 6.30 மணி நிலவரம்)