மேலும்

நாள்: 25th November 2016

திருகோணமலைக் காட்டுக்குள் அமெரிக்கப் படை முகாம் – படங்கள்

திருகோணமலைத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் அமெரிக்க கடற்டையின் யுஎஸ்எஸ் சோமசெற் கப்பலில் வந்துள்ள அமெரிக்க மரைன் படைப்பிரிவினர் சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சி ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு நினைவு வணக்கம் – மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்பு

தமிழீழ தாயக விடுதலைக்காய் உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூரும் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு, யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றது.

சிறிலங்கா அதிபருடன் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீண்ட சந்திப்பு

தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு புதிய அரசியலமைப்பையே அறிமுகப்படுத்துமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜீவ் கொலை பின்னணியை விபரிக்கும் நளினியின் வாழ்க்கை வரலாற்று நூல் சென்னையில் வெளியீடு

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நளினியின் வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய  “ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும்; பிரியங்கா, நளினி சந்திப்பும்”  என்ற நூல் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது.

கணினித் தொகுதி செயலிழந்ததால், முடங்கிப் போன கட்டுநாயக்க விமான நிலையம்

கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தின் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், விமான நிலையச் செயற்பாடுகள் நேற்று இரண்டரை மணிநேரம் முடங்கிப் போயின.

லசந்தவைக் கொன்றது இராணுவப் புலனாய்வு அதிகாரிகளே – குற்றப்புலனாய்வுப் பிரிவு

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகளே படுகொலை செய்தனர் என்று, குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஆய்வாளர் நிசாந்த சில்வா, கல்கிசை நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.