யாழ்.பல்கலைக்கழக மோதல் குறித்து விசாரிக்க மூவர் அடங்கிய விசாரணைக்குழு
யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர் வரவேற்பு நிகழ்வில். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு, சிங்கள அதிகாரி ஒருவர் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.