மேலும்

போர்க்களமான சிறிலங்கா நாடாளுமன்றம் – எதிரணியினரின் தாக்குதலில் ஐதேக உறுப்பினர் காயம்

sandith-samarasinge-injuredசிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலையின் போது, எதிரணி உறுப்பினர்களால் தாக்கப்பட்ட, ஐதேக உறுப்பினர் சண்டித் சமரசிங்க காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் நாடாளுமன்றம் கூடிய போது, மகிந்த ராஜபக்சவின் இராணுவப் பாதுகாப்பு விலக்கப்பட்ட விவகாரம் குறித்து, கூட்டு எதிரணியினர் பிரச்சினை எழுப்பினர்.

இந்தநிலையில், அமைச்சர் சரத் பொன்சேகா இந்த விவகாரம் தொடர்பாக உரையாற்றிக் கொண்டிருந்த போது, எதிரணியினர் கூச்சல் எழுப்பிக் குழப்பம் விளைவித்தனர்.

sandith-samarasinge-injured

இதையடுத்து, ஏற்பட்ட குழப்பநிலையின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் சண்டித் சமரசிங்கவை எதிரணி உறுப்பினர்கள் நிலத்தில் தள்ளி விழுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது.

தலை மற்றும் முகத்தில் காயமடைந்த அவர், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், நாடாளுமன்றம் நாளை பிற்பகல் 1 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குழுவொன்றை நியமிப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *