மேலும்

உலக ஊடக சுதந்திர தரவரிசைப் பட்டியலில் சிறிலங்கா 141ஆவது இடத்தில்

World Press Freedom Indexஉலக ஊடக சுதந்திர தரவரிசைப் பட்டியலில், சிறிலங்கா இந்த ஆண்டு, 141ஆவது இடத்தில் உள்ளது. ஆர்எஸ்எவ் எனப்படும், எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பினால்,  2016ஆம் ஆண்டுக்கான உலக ஊடக சுதந்திர தர வரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

180 நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ள இந்தப் பட்டியலில், முதலிடத்தில் பின்லாந்து இருக்கிறது. ஆறாவது ஆண்டாக பின்லாந்து இந்த இடத்தை தக்கவைத்திருக்கிறது. அடுத்த இடங்களில், நெதர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகள் உள்ளன.

சிறிலங்கா 141ஆவது இடத்தில் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறிலங்கா 165 ஆவது இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், தெற்காசிய நாடுகளான இந்தியா 133, ஆப்கானிஸ்தான் 120, நேபாளம் 105,பூட்டான் 95, என்பன சிறிலங்காவை விட முன்னிலையில் உள்ளன.

அமெரிக்கா 44 ஆவது இடத்திலும், ரஸ்யா 148ஆவது இடத்திலும், சீனா 176ஆவது இடத்திலும் உள்ளன.

துர்க்மெனிஸ்தான், வடகொரியா, எரித்ரியா ஆகிய நாடுகள் கடைசி மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *