மேலும்

எரிபொருள் விநியோகப் பதிவேடுகளை சமர்ப்பிக்க சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு உத்தரவு

Prageeth Ekneligodaமின்னேரியா இராணுவ முகாமின் எரிபொருள் விநியோகம் தொடர்பான பதிவேடுகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சமர்ப்பிக்குமாறு, சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு ஹோமகம பதில் நீதிவான், உத்தரவிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட வழக்கு நேற்று ஹோமகம நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, மின்னேரியா இராணுவ முகாமில் இருந்து 2010 ஜனவரி 25ஆம் நாள், சந்தேக நபர்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டது தொடர்பான பதிவேடுகளை, சமர்ப்பிக்குமாறு சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு உத்தரவிடுமாறு, குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, எரிபொருள் விநியோகம் தொடர்பான பதிவேடுகளைச் சமர்ப்பிக்க சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.

அத்துடன், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சந்தேக நபர்கள் ஒன்பது பேரையும், எதிர்வரும் 26ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *