மேலும்

சிறிலங்காவுக்கான உதவிகள் தனிநபர்களையோ கட்சிகளையோ சார்ந்ததாக இருக்காது – சீன அதிபர்

Xi-Ranil (1)சிறிலங்காவுக்கான சீனாவின் உதவிகள், கொள்கைகளின் அடிப்படையிலும், சிறிலங்கா மக்களின் நலன் அடிப்படையிலுமே இருக்குமே தவிர, அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்களைச் சார்ந்ததாக இருக்காது என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

பீஜிங்கில் நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே, சீன அதிபர் ஜின் பின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்கள் மண்டபத்தில், சிறிலங்கா பிரதமர் தலைமையிலான குழுவினருக்கும், சீன அதிபர் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் நேற்று நடந்த இந்தச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சீன அதிபர் ஜி ஜின்பிங்,

“சிறிலங்காவில் ஆட்சியில் உள்ள கூட்டு அரசாங்கத்தின் கீழ் சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவுகள் வலுப்படும் என்று நம்புகிறேன்.

சீனாவின் ஒரு பட்டி ஒரு பாதை திட்டத்தில் சிறிலங்கா ஒரு முக்கியமான நாடு. சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவுகளை மூன்றாவது தரப்பினால் சீர்குலைத்து விட முடியாது.

Xi-Ranil (1)Xi-Ranil (2)

மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான சிறிலங்காவின் தற்போதைய வெளிவிவகாரக் கொள்கையை சீனா வரவேற்கிறது.

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் மீள ஆரம்பிக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

சிறப்புப் பொருளாதார  மற்றும் நிதி வலயத்தை அமைக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவை மதிக்கிறோம்.

சிறிலங்கா அபிவிருத்திப் பாதைக்கு வர முன்னர், வாய்ப்புக்களை பற்றிக் கொள்ளும் திறனைப் பெற்று விடும் என்று நம்புகிறேன்.

சிறிலங்காவி்ன் அபிவிருத்திக்கு சீன வங்கிகள் உதவி அளிக்கும்.

பாரம்பரிய நட்புறவை உறுதிப்படுத்துவதற்கும், ஒத்துழைப்புகளை விரிவாக்குவதற்கும், மூலோபாய கூட்டு ஒத்துழைப்பை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வதற்கும், சிறிலங்காவுடன் இணைந்து பணியாற்ற சீனா விரும்புகிறது.

அபிவிருத்தி மூலோபாயங்கள் ஒருங்கிணைக்கவும், உயர் மட்ட பரிமாற்றங்களைப் பேணவும், மூலோபாய தொடர்பை வலுப்படுத்தவும், நீண்ட கால இருதரப்பு உறவுகளைக் கையாளவும், மூலோபாய முன்னோக்கு,  இருதரப்பு உறவுகள் மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை வடிவமைப்பதிலும் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *