மேலும்

அனைத்துலக கப்பல் பாதைகளைப் பாதுகாக்கும் பணியில் இறங்குகிறது சிறிலங்கா கடற்படை

ranil-sln (1)அனைத்துலக கடற்பரப்பில் நாடுகடந்த வர்த்தகத்தைப் பாதுகாப்பதற்கு சிறிலங்கா கடற்படைக்குத் தேவையான கப்பல்கள், விமானங்கள் மற்றும் கருவிகள் கொள்வனவு செய்யப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலை கடற்படை பயிற்சிக் கல்லூரியில், பயிற்சியை முடித்து வெளியேறிய கடற்படை அதிகாரிகளின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்றிரவு இடம்பெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர்,

“எதிர்காலத்தில் இந்திய, பசுபிக் பிராந்தியங்களில், அனைத்துலக கப்பல் பாதையைகளை சிறிலங்கா கடற்படை பாதுகாக்கும்.

இந்தியப் பெருங்கடல், பசுபிக் பெருங்கடல், பண்டா ஏஸ் கடல், மற்றும் மலாக்கா நீரிணை வழியான கப்பல் பாதைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் சிறிலங்கா கடற்படை பங்களிக்கவுள்ளது. நாம் அதற்குத் தயாராக வேண்டும்.

ranil-sln (1)ranil-sln (2)ranil-sln (3)

குறிப்பாக, இந்தியப் பெருங்கடலைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். இந்தப் பகுதியில் ஒரு கப்பலுக்கு பிரச்சினை ஏற்பட்டால், அனைத்துலக வர்த்தகம் பாதிக்கப்படும்.

அனைத்துலக அளவில் பங்களிப்பதற்கு சிறிலங்கா கடற்படைக்குத் தேவையான கப்பல்கள், விமானங்கள், கருவிகளை சிறிலங்கா கொள்வனவு செய்யும்.

இதற்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்கு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நான்கு மடங்காக வேண்டும்.

சிறிலங்கா பொருட்களுக்கு அனைத்துலக சந்தைகளில் இடம் தேடுவதற்காக, நாம் சீனா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, கிழக்காபிரிக்க நாடுகளுடன் பொருளாதார உடன்பாடுகளைச் செய்து கொள்ளவுள்ளோம்.

இப்போது பயிற்சியை முடித்து வெளியேறும் கடற்படையினர் அதிஸ்டசாலிகள். ஏனென்றால், நீங்கள், சிறிலங்காவின் கடலை மட்டும் பாதுகாக்கப் போவதில்லை, இந்தப் பிராந்தியத்தின் கடலைப் பாதுகாக்கப் போகிறீர்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *