மேலும்

தமிழர்களின் கையில் தான் சிங்களவர்களின் நிம்மதி – சிறிலங்கா அதிபர்

maithriதமிழர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே, இந்த நாட்டில் சிங்கள பௌத்தர்கள் நிம்மதியாக வாழ முடியும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஏறாவூரில் நேற்று ஆடைத்தொழிற்சாலை ஒன்றைத் திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“எனக்கு வாக்களித்த மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை உருவாக்கித் தாருங்கள் என்றே கேட்டார்கள்.

சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் பயந்துடன் வாழ்ந்த காலம் உள்ளது. அவர்கள் சுதந்திரமாக வாழவில்லை. சுதந்திரமாக தொலைபேசியில் கூட பேசவில்லை. தொலைபேசியில் பேசும் போது கூட இரகசியமாகவே பேசினார்கள். தமது உரையாடல்கள் பதிவு செய்யப்படுகின்றதென பயந்தார்கள்.

இந்த நாட்டு மக்கள் சுதந்திரமாக பேசக்கூடிய நிலை இருக்கவில்லை. போர் முடிந்த பின்னரும் அச்சமான சூழலே காணப்பட்டது. துப்பாக்கியினால் நிலையான சமாதானத்தை உருவாக்க முடியாது.

நாட்டு மக்கள் மனதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அவர்களின் உளரீதியான பிரச்சினைகளுக்கு நிரந்தமான தீர்வை வழங்கவேண்டும். போர்க்காலத்தில் எந்த மக்கள் இன, மத, பேதமின்றி மடிந்தார்கள்.

போர் முடிந்த பின்னர் நிம்மதியாக வாழலாம் என்று கனவு கண்டார்கள். எனவே மீண்டும் போர் ஏற்படாத நிலைமையை உருவாக்கவேண்டும். நாட்டில் நிலையான சமாதானத்தை உருவாக்கும் பாரிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

கிழக்கு மகாணத்தினதும் மேற்கு மகாணத்தினதும் அபிவிருத்தி சமமாக உள்ளதா? மக்கள் பொருளாதார நிலைமை சமமாக உள்ளதா? கல்வி வசதிகள் சமமாக உள்ளதா? சுகாதார சேவை ஒரே மாதியாக வழங்கப்படுகின்றனவா? பொதுப் போக்குவரத்து வசதி சமமாக உள்ளதா?

பிரச்சினைகளை பார்க்கையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவ்வாறானால் இந்த பிரச்சினையை நாம் புரிந்து கௌ்ளவேண்டும்.

வடக்கு ,கிழக்கு, மேற்கு, தெற்கு என்ற வேறுபாடு இல்லை. அனைத்து மாகாணங்களும் ஒரேமாதிரியாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

மீண்டும் துப்பாக்கியை ஏந்துவதற்கு இடமளிக்க கூடாது. மக்கள் அனைவரும் சந்தோசமாக வாழும் சூழலை நாம் உருவாக்க வேண்டும்.

சிங்கள மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால் தமிழ் முஸ்லிம் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும். அனைவரும் தங்களுடைய பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும்.

அவ்வாறான செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுக்கும் போது தென்னிலங்கையிலுள்ள சில கடும்போக்காளர்கள் நாங்கள் இந்த நாட்டைப் பிரிக்கப் போகிறோம் – காட்டிக் கொடுக்கப் போகின்றோம்- அனைத்துலகத்துக்கு அடிபணிய வைக்கப்போகிறோம் என்று பரப்புரை செய்கிறார்கள். விமர்சிக்கிறார்கள்.

அவ்வாறு விமர்சிக்கிறவர்களைவிட இந்த நாட்டைப் பற்றி எங்களுக்கு அதிக அக்கறை இருக்கின்றது.

எனவே எதிராக குரலெழுப்பி பரப்புரை செய்வதை விடுத்து  இந்த நாட்டை அபிவிருத்தி செய்து சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அனைவரும் ஒன்றாக கைகோர்க்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *