மேலும்

கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் சிறுகதைப் போட்டி -2016 முடிவுகள்

ki-pi-short story winnersகவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவாக “காக்கைச் சிறகினிலே” இதழ் குழுமத்தினரால் நடத்தப்பட்ட புலம்பெயர் சிறுகதைப் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னையிலிருந்து வெளிவரும் இலக்கிய சஞ்சிகையான ‘காக்கைச் சிறகினிலே’ இதழ்க் குழுமம் ஆண்டு தோறும் கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசுத் திட்டமொன்றை நடத்துவதென அறிவித்தது.

அந்தவகையில் கவிஞர் கிபி அரவிந்தனது முலாவது நினைவையொட்டி ‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016’ யை முன்னெடுத்தது.

இப்போட்டியின் கடைசி நாளாக 31. 01. 2016 என அறிவிக்கப்பட்டு முடிவு கி.பி. அரவிந்தன் அவர்களின் முதலாவது நினைவு மாதமான மார்ச்சு 2016 இல் அறிவிக்கப்படும் எனவும் வெளிப்படுத்தப்பட்டது.

இதன்படியாக இந்தப் போட்டியின் முடிவு  கடந்த 26. 03. 2016 சனியன்று பாரீசில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் அறிவிக்கப்பட்டது.

ki-pi-short story winners

பரிசு பெற்றோர் விபரம் :

முதற்பரிசு:
குருவிகளின் வீடு – சாந்தினி வரதராஜன் (ஜேர்மனி)

இரண்டாம் பரிசு :
ஒற்றை யானை – ஜோசப் அமுதன் டானியல் (மன்னார் அமுதன் – இலங்கை)

மூன்றாம் பரிசு :
முன்னும் பின்னும் சில நாட்குறிப்புகள் – சோ. சுப்புராஜ் (தமிழ்நாடு – இந்தியா)

ஆறுதல் பரிசுகள் :

4. ஒரு கதையும் கருமாந்திரங்களும் – வேலாயுதம் கிருபதாசன் (நெற்கொழு தாசன் – பிரான்சு)
5. அலுவாக்கரை – எஸ்.ஏ.உதயன் (இலங்கை)
6. நீள் பயணம் – இராசு தம்பையா (மணிதாசன் – ஜேர்மனி)

தமிழ் இலக்கிய ஆர்வலர் இ. பத்மநாப ஐயர் அவர்களது வழிகாட்டுதலுடன் உலகளாவிய தமிழ் எழுத்தாளர்கள் கொண்ட நடுவர் குழுவினராக  அ. முத்துலிங்கம் (கனடா), மு.புஸ்பராசன் (இங்கிலாந்து),  இளவாலை விஜயேந்திரன் (நோர்வே),  அ. யேசுராசா (இலங்கை),  ஜோ டி குருஸ் (தமிழ்நாடு) கலந்து கொண்டனர்.

ஒரு கருத்து “கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் சிறுகதைப் போட்டி -2016 முடிவுகள்”

  1. arni narendran says:

    Congratulations to the winners of the Tamil Diaspora short story competition-all these stories must soon be published as a Book by the organizers of the worlwide event.-greetings from Mumbai-India.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *