மேலும்

வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே கடமைகளை பொறுப்பேற்றார்

reginold cooray (1)வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக நியமிக்கப்பட்ட ரெஜினோல்ட் குரே இன்று யாழ்ப்பாணத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் வடக்கு மாகாண ஆளுனராகப் பதவியேற்ற ரெஜினோல்ட் குரே இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுனரின் செயலகத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இந்த நிகழ்வில், வடக்கு மாகாண முதலமைச்சர், அவைத்தலைவர், அமைச்சர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியத் துணைத் தூதுவர், மற்றும் அரச அதிகாரிகள், இராணுவ, காவல்துறை, கடற்படை, அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

reginold cooray (1)reginold cooray (2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *