மேலும்

ஈராக்கிலுள்ள சிறிலங்கா தூதரகத்தை மூடும் யோசனை- அமைச்சரவையில் கடும் வாக்குவாதம்

cabinetஈராக்கில் உள்ள சிறிலங்கா தூதரகத்தை மூடுவதற்கு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தினால், சிறிலங்கா அமைச்சரவையில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றன.

நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ஈராக்கில் உள்ள சிறிலங்கா தூதரகத்தை மூடும், அமைச்சரவைப் பத்திரத்தை, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமர்ப்பித்தார். இதற்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன் கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.

போரின் போது, சிறிலங்காவுக்கு ஆதரவாக ஈராக் இருந்தது என்பதையும், தற்போதும், சிறிலங்காவிடம் இருந்து பெருமளவு தேயிலையை கொள்வனவு செய்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால், மங்கள சமரவீரவுக்கும், ரிசாத் பதியுதீனுக்கும் இடையில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

ஈராக்கில் உள்ள சிறிலங்கா தூதரகம் மூடப்படுவதற்கு, அமைச்சர்கள் தலதா அத்துகோரள, சரத் அமுனுகம, அனுர பிரியதர்சன யாப்பா, ராஜித சேனாரத்ன, பைசர் முஸ்தபா, மகிந்த சமரசிங்க, அனுர யாப்பா அபேவர்த்தன உள்ளிட்ட அமைச்சர்களும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இதனால், மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை மீளாய்வு செய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *