மேலும்

தன்னைக் கொல்ல முயன்ற முன்னாள் போராளிக்கு ஆசீர்வாதம் அளித்தார் மைத்திரி

maithri-jenivan (1)தன்னைக் கொல்ல முயன்ற குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினருக்குப் பொதுமன்னிப்பு அளித்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அவரைச் சந்தித்து ஆசியும் வழங்கினார்.

2006ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த போது, அவரைக் குண்டுவைத்துக் கொல்ல முயன்றார் என்ற குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சேனன் என அழைக்கப்படும் சிவராசா ஜெனீவன் கைது செய்யப்பட்டார்.

பொலன்னறுவவில் இருந்து மட்டக்களப்பு சென்று கொண்டிருந்த போது இவர் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த ஜுலை 3ஆம் நாள் பொலன்னறுவ மேல் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டது. இதன்படி, குற்றம்சாட்டப்பட்ட ஜெனீவனுக்கு 10 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

maithri-jenivan (1)maithri-jenivan (2)இந்தநிலையில், தன்னைக் கொல்ல  முயன்றதாக தண்டனை அனுபவித்து வந்த ஜெனீவனுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு அளித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று ஒரு ஆண்டு நிறைவு பெற்றதைக் குறிக்கும் நிகழ்வுகள் இன்று பண்டாரநாயக்க அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் முடிவில், மேடைக்கு வந்த ஜெனீவனுக்கு, கைலாகு கொடுத்த மைத்தரிபால சிறிசேன, அவரது தலையில் கைவைத்து ஆசீர்வாதம் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *