மேலும்

நாள்: 20th October 2015

விதைக்கப்பட்டது தமிழினியின் வித்துடல்

புற்றுநோயால் சாவைத் தழுவிய விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்) யின் வித்துடல் இன்று பிற்பகல் பரந்தன், கோரக்கன்கட்டு மயானத்தில் விதைக்கப்பட்டது.

இடையறாத இலட்சிய தாகத்துடன் பயணித்த, நெஞ்சுரம்மிக்க தமிழினி – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

இடையறாத இலட்சிய தாகத்துடன் பயணித்த, நெஞ்சுரம்மிக்க தமிழினி அவர்களின் எண்ணமெல்லாம் தமிழ்மக்களின்  விடுதலைபற்றியும் தமிழ்ப்பெண்களின் உயர்ச்சிபற்றியதாகவுமே இருந்திருக்கின்றன.  அவரது எண்ணங்கள் ஈடேற இதய  சுத்தியோடு நாம் அனைவரும் உழைக்கவேண்டும்.

பாலியல் இலஞ்சம் கோரிய விவகாரம் – ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்கிறது செஞ்சிலுவை சங்கம்

இந்தியாவின் வீடமைப்பு திட்ட உதவி நிதியைப் பெறுவதற்கு, சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கத்தின் தொழில்நுட்ப அதிகாரி பாலியல் இலஞ்சம் கோரியதாக, முழங்காவில் பகுதியை சேர்ந்த கணவனை இழந்த பெண் ஒருவர் சுமத்திய குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று சிறிலங்கா செஞ்சிலுவைச்சங்கம் தெரிவித்துள்ளது.

மூன்று விசாரணைக் குழுக்களின் அறிக்கைகள் – நாடாளுமன்றில் சமர்ப்பித்தார் ரணில்

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்திய மூன்று முக்கிய விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

மன்னம்பிட்டி முகாமில் கொல்லப்பட்டு திருமலை கடலில் வீசப்பட்டார் பிரகீத் – விசாரணையில் தகவல்

கடத்தப்பட்டு காணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கொலை செய்யப்பட்டு, கடலில் வீசப்பட்டிருக்கலாம் என்று, இதுகுறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

நோர்வேயின் அமைதி முயற்சிகள் குறித்த நூல் லண்டன், ஒஸ்லோவில் வெளியிடப்படுகிறது

சிறிலங்காவில் அமைதியை ஏற்படுத்த நோர்வே மேற்கொண்ட முயற்சிகளை விபரிக்கும், நூல் இம்மாதம் 28ஆம் நாள் லண்டலிலும், அடுத்தமாதம் 2ஆம் நாள் ஒஸ்லோவிலும் வெளியிடப்படவுள்ளன.

கனடா நாடாளுமன்றத் தேர்தல் – ஹரி ஆனந்தசங்கரி வெற்றி, ராதிகா தோல்வி

கனேடிய நாடாளுமன்றத்துக்கு நேற்று நடந்த தேர்தலில் லிபரல் கட்சி முன்னணியில் இருக்கும் நிலையில் அந்தக் கட்சியின் சார்பில் ஸ்காபரோ ரூஜ் பார்க்  தொகுதியில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 4294 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

விசாரணையில் வெளிநாட்டவர்களுக்கு இடமில்லை என்கிறார் சம்பிக்க ரணவக்க

கலப்பு நீதிமன்ற முறைமையில் எவ்வாறான அனைத்துலக உதவிகளை பெறுவது என்பதை சிறிலங்கா அரசாங்கமே தீர்மானிக்கும் என்றும், இதில் வெளிநாட்டவர்களுக்கு இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.

ரவிராஜ் படுகொலை சூத்திரதாரியை கைது செய்ய சுவிசின் உதவியை நாடுகிறது சிறிலங்கா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை குறித்து விசாரித்து வரும் சிறிலங்கா காவல்துறை, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரைக் கைது செய்வதற்கு சுவிற்சர்லாந்து அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளது.

சிங்கக்கொடி ஏந்தி சிங்கள நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் – மகிந்த அணி சூளுரை

மீண்டும் சிங்கக்கொடிகளை ஏந்தி சிங்கள பெளத்த நாட்டைக் காப்பாற்ற அனைத்து சிங்களவர்களும் முன்வரவேண்டும், இந்த நாட்டை சிங்கள நாடாகவே கட்டியெழுப்ப வேண்டும் என்று, கொழும்பில் நேற்று நடத்திய கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியினர் சூளுரைத்துள்ளனர்.