மேலும்

நாள்: 18th October 2015

சீனக் கடற்படை கப்பல்கள் அனுமதி கோரினால் பரிசீலிப்போம் – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

சீனக் கடற்படைக் கப்பல்கள் சிறிலங்காவுக்கு மீண்டும் வருவதற்கு அனுமதி கோரினால் அதுபற்றி ஆலோசிக்கப்படும் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றமிழைத்தவர்களை கதாநாயகர்களாக பாதுகாக்கக் கூடாது – ருக்கி பெர்னான்டோ

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்குப் பதிலாக சிறிலங்கா அரசாங்கமானது சிங்கள சமூகத்திடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான கருத்துக்களையே முன்வைக்கிறது.

விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி மரணம்

விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி (சிவகாமி சிவசுப்பிரமணியம்- வயது 43) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, இன்று அதிகாலை மகரகம மருத்துவமனையில் மரணமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வீடமைப்புத் திட்ட முறைகேடுகளை அம்பலப்படுத்துகிறார் கிளிநொச்சி பங்குத் தந்தை

இந்திய வீடமைப்புத் திட்ட உதவிகளைப் பெறுவதில் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தொடர்பாக, தாம் சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கத்தின் உயர் அதிகாரிகளுக்குப் பலமுறை கடிதங்களை அனுப்பியதாக, கிளிநொச்சி பங்குத் தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு போர் விமானங்களை விற்க பாகிஸ்தானுடன் போட்டியில் இறங்கியது இந்தியா

சிறிலங்காவுக்குப் போர் விமானங்களை விற்பதற்கான போட்டியில், இந்தியாவும் இணைந்து கொண்டிருப்பதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய வீடமைப்புத் திட்டத்துக்கு பாலியல் இலஞ்சம் கோரிய விவகாரம் – விசாரணைகள் நிறைவு

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில், இந்திய வீடமைப்புத் திட்ட உதவிக்கு பாலியல் இலஞ்சம் கோரியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, இந்தியத் தூதரகமும், சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து நடத்திய விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.

60 அரசியல் கைதிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் விடுதலை?

நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள, சுமார் 60 அரசியல் கைதிகள், அடுத்த மாதம் முற்பகுதியில் விடுவிக்கப்படுவார் என்று என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வு

இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்களை இழைத்தவர் என்ற அனைத்துலக மட்டத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் உள்ளிட்ட சிறிலங்கா இராணுவத்தின் மூன்று முக்கிய அதிகாரிகள் ஓய்வு பெறவுள்ளனர்.