மேலும்

நாள்: 28th October 2015

இரண்டு கட்டங்களாக நடக்கிறது இந்திய – சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப்பயிற்சி

திருகோணமலையில் நேற்று ஆரம்பமாகியுள்ள இந்திய – சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சி இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ளன.

சூளைமேடு கொலை வழக்கில் காணொளித் தொழில்நுட்பம் மூலம் சாட்சியமளிக்கிறார் டக்ளஸ்

சென்னை, சூளைமேட்டில் 1986ஆம் ஆண்டு ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில், ஈபிடிபி பொதுச்செயலரும், சிறிலங்காவின் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, காணொளித் தொழில்நுட்பம் மூலம் சாட்சியமளிக்கவுள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் முக்கிய சந்திப்புகளில் பங்கேற்கிறார் அமெரிக்க அதிகாரி கத்தரின் ருசெல்

சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், பூகோள பெண்கள் விவகாரங்களுக்கான தூதுவராகப் பணியாற்றும் கத்தரின் ருசெல் அம்மையார் இன்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டு முக்கிய சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.

விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குமாறு பரிந்துரைக்கவில்லை – பரணகம

மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து நடத்தப்படும் விசாரணைகளில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் பரிந்துரை செய்யவில்லை என்று, காணாமல் போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.