மேலும்

நாள்: 15th October 2015

மகிந்தவின் எதிர்ப்பினால் அதிபர் ஆணைக்குழுவின் விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு

ஊழல், மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம், சிறிலங்காவின் முன்னைய ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தரப்பு சட்டவாளர்கள் தெரிவித்த எதிர்ப்பினால், அவரிடம் இன்று நடத்தப்படவிருந்த விசாரணைகள் நாளைக்குப் பிற்போடப்பட்டுள்ளன.

அமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் வாக்குறுதியை ஏற்க அரசியல் கைதிகள் மறுப்பு

சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச இன்று வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்று, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும், தமிழ் அரசியல் கைதிகளுடன் பேச்சு நடத்தினார்.

‘யாரும் என்னைக் கைது செய்ய முடியாது’ – என்கிறார் கருணா

தன்னை யாரும் கைது செய்ய முடியாது என்று, சிறிலங்காவின் முன்னாள் பிரதி அமைச்சரான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மகிந்தவிடம் இன்று விசாரணை – கைது செய்யப்படக் கூடும் என்று பரவலாக வதந்தி

அதிபர் தேர்தல் பரப்புரைக்காக சுயாதீன தொலைக்காட்சியில் விளம்பரங்களை ஒளிபரப்பிய கட்டணத்தைச் செலுத்த தவறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, இன்று நிதிமோசடிகள் குறித்து  விசாரிக்கும் அதிபர் ஆணைக் குழுவினால் விசாரிக்கப்படவுள்ளார்.

சிறிலங்கா மீதான அனைத்துலக அழுத்தங்களுக்கு கூட்டமைப்பே காரணம் – வாசுதேவ குற்றச்சாட்டு

சிறிலங்காவுக்கு எதிரான அனைத்துலக அழுத்தங்கள் வலுப்பெற்றதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, போர்க்குற்ற விவகாரத்தை கூட்டமைப்பு அனைத்துலக மயபப்படுத்தி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மோசமடையும் அரசியல் கைதிகளின் உடல்நிலை – சிறிலங்கா அரசு பாராமுகம்

தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த  தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று நான்காவது நாளை எட்டியுள்ளது.

‘கூட்டமைப்பினரிடம் காட்டுங்கள்… சந்தோசப்படுவார்கள்’ – நீதிமன்றில் பிள்ளையான்

‘நன்றாக படம் எடுத்து ரீ.என்.ஏ. காரர்களிடம் (தமிழ் தேசிய கூட்டமைப்பு) காட்டுங்கள், சந்தோசப்படுவார்கள்’ என்று  கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும், சிவனேசதுரை சந்திரகாந்தன்  தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினருக்கு கோத்தா உத்தரவுகள் பிறப்பித்திருந்தால் அது சட்டவிரோதம் – சரத் பொன்சேகா

சிறிலங்கா இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு பதில் வழங்குவதற்கு, ஜெனிவா தீர்மானம் காலஅவகாசத்தை அளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.