மேலும்

நோர்வேயின் அமைதி முயற்சிகள் குறித்த நூல் லண்டன், ஒஸ்லோவில் வெளியிடப்படுகிறது

‘To end a civil war’சிறிலங்காவில் அமைதியை ஏற்படுத்த நோர்வே மேற்கொண்ட முயற்சிகளை விபரிக்கும், நூல் இம்மாதம் 28ஆம் நாள் லண்டலிலும், அடுத்தமாதம் 2ஆம் நாள் ஒஸ்லோவிலும் வெளியிடப்படவுள்ளன.

‘ஒரு உள்நாட்டுப் போரின் முடிவுக்கு – சிறிலங்காவுடனான நோர்வேயின் அமைதி ஈடுபாடு’ என்ற தலைப்பில், பிபிசியின் முன்னாள் ஊடகவியலாளரும், பல அரசசார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றியவருமான மார்க் சோல்டர் இந்த நூலை எழுதியுள்ளார்.

சிறிலங்கா அமைதி முயற்சிகளில், நோர்வேயின் சார்பில் பங்கெடுத்த அந்த நாட்டின் முன்னாள் அமைச்சரும், சிறிலங்காவுக்கான சிறப்புத் தூதுவராகப் பணியாற்றியவருமான எரிக் சொல்ஹெய்ம் மற்றும், நோர்வேயின் முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சர் விதார் ஹெல்கீசனும் இந்த நூலுக்குத் தேவையான தகவல்களை அளித்துள்ளனர்.

சிறிலங்காவில் போரை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்த, நோர்வே மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பாக, இந்த நூலில் விரிவாக விபரிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான அமைதி முயற்சிகளின் போது, இடம்பெற்ற, இதுவரை வெளிவராத பல தகவல்களை இந்த நூல் தாங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நூல் வரும் 28ஆம் நாள் லண்டனில் உள்ள கீழைத்தேய மற்றும் ஆபிரிக்க கற்கைகளுக்கான பாடசாலையில் வெளியிடப்படவுள்ளது.

இதையடுத்து நடக்கவிருக்கும் கலந்துரையாடலில், நூலாசிரியர் மார்க் சோல்டர், எரிக் சோல்ஹெய்ம் மற்றும் விதார் ஹெல்கீசன் உள்ளிட்டோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

அதேவேளை, வரும் அடுத்தமாதம் 2ஆம் நாள் நோர்வேயின் ஒஸ்லோ நகரில் உள்ள அமைதிக்கான ஆய்வு நிறுவகத்திலும், இந்த நூல் வெளியிடப்படவுள்ளது.

இந்த நிகழ்விலும், நூலாசிரியர் மார்க் சோல்டர், எரிக் சோல்ஹெய்ம் மற்றும் விதார் ஹெல்கீசன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஒரு கருத்து “நோர்வேயின் அமைதி முயற்சிகள் குறித்த நூல் லண்டன், ஒஸ்லோவில் வெளியிடப்படுகிறது”

  1. arni narendran says:

    Norway has been a very sincere Peace initiator in the Srilankan civil war, but somewhere it failed. We expect to know more than what we already know from the new Book ‘To end a civil war’ . Mr. Erik Splheim indeed tried his Best , had he succeeded, he would have won the Nobel Prize for Peace.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *