மேலும்

நாள்: 5th October 2015

சிறிலங்காவின் உள்நாட்டு செயல்முறைக்கு ஜப்பான் ஆதரவு

போருடன் தொடர்புடைய விவகாரங்களுக்கு, உள்நாட்டு செயல்முறைகளின் மூலம் தீர்வு காண்பதற்கு, சிறிலங்காவுக்கு ஜப்பான் ஆதரவளிப்பதாக, சிறிலங்கா பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.

மகிந்தவைக் கண்டு ஊடகங்கள் இன்னமும் அஞ்சுகின்றன – அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச மீது ஊடகங்கள் இன்னமும் அச்சம் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல.

ஜெனிவா தீர்மானம் – மீளிணக்கப்பாட்டின் தொடக்கப் புள்ளியாகுமா?

சிறிலங்காவில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் மனித உரிமைகளை உறுதி செய்வதற்கான புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதால் கொழும்புடன் தனது உறவைப் புதுப்பித்துக் கொள்வதில் அமெரிக்கா அதிக ஆர்வம் காண்பிக்கிறது. இதனாலேயே சிறிலங்காவுடனான தனது கடும்போக்கான நிலைப்பாட்டைக் கைவிட்டுள்ளது.

கடாபியின் தோளில் நான் கைபோடவில்லை – மறுக்கிறார் மகிந்த

தாம் லிபிய அதிபராக இருந்த முவம்மர் கடாபியின் தோளில் கைபோடவில்லை என்றும், அவர் தனது தோளில் கைபோட்டிருந்தார் என்றும் தெரிவித்துள்ளார் சி்றிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

கிரித்தல இராணுவ புலனாய்வு முகாமுக்குள் தேடுதல் நடத்த நீதிமன்றம் அனுமதி

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்திச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த, கிரித்தல இராணுவப் புலனாய்வு முகாமில் ஆய்வுகளை மேற்கொண்டு ஒளிப்படம் எடுக்கவும், அங்குள்ள இராணுவ ஆவணங்களைப் பரிசீலிக்கவும், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஜெனிவா தீர்மானம் இராஜதந்திர வெற்றியல்ல – என்கிறார் மகிந்த

ஐ.நாமனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது, சிறிலங்காவுக்குக் கிடைத்த இராஜதந்திர வெற்றி என சிலர் குறிப்பிடும் கருத்துடன் தன்னால் உடன்பட முடியாது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஜப்பானியப் பிரதமருடன் ரணில் பேச்சு

ஜப்பானுக்கு ஐந்து நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து, நேற்று ஜப்பானியப் பிரதமர் சின்ஷோ அபேயைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.