மேலும்

நாள்: 14th October 2015

சிறிலங்காவில் சீன இராணுவ உயர்மட்டக் குழு

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. சிறிலங்கா மற்றும் சீன இராணுவங்களுக்கிடையில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும், நல்லெண்ணப் பயணமாகவே சீன உயர்மட்டக்குழு சிறிலங்கா வந்துள்ளது.

இந்தியச் சந்தையை முறியடிக்க சீனா கால்வைக்க வேண்டிய இடம் சிறிலங்கா

சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்பட்ட துறைமுகத் திட்டத்தை மீளவும் புதுப்பிப்பதற்கு உதவி கோரியுள்ளதானது, இந்நாட்டின் முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் சீனா அதிகளவு செல்வாக்குச் செலுத்தியதற்கான ஒரு குறியீடாகக் காணப்படுகிறது.

பிள்ளையானை நொவம்பர் 4ஆம் நாள் வரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனை, எதிர்வரும் நொவம்பர் 4ஆம் நாள் வரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் அகழ்வுக்கு புதிய கேள்விப்பத்திரம்

மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வை மேற்கொள்வதற்கு, சிறிலங்கா அரசாங்கம் புதிய கேள்விப்பத்திரங்களைக் கோரவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் படுகொலைகள் குறித்து விசாரிக்க புதிய குழு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் படுகொலைகள் தொடர்பாக விசாரிக்க, நாடாளுமன்றக் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலை: சிறிலங்கா அரசு உறுதியான பதில் இல்லை – சுமந்திரன் விசனம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் எந்த உறுதியான பதிலையும் வழங்கவில்லை என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விசனம் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது நாளை எட்டியது அரசியல் கைதிகளின் போராட்டம் – நான்கு பேர் மருத்துவமனையில்

தமது விடுதலையை வலியுறுத்தி, தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்த  சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு கைதிகளின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் சிறைச்சாலை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

14 ஆண்டுகளுக்குப் பின் ஊர்காவற்றுறை தாக்குதல் வழக்கு – 2 ஈபிடிபியினருக்கு விளக்கமறியல்

2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்காக தீவகத்துக்குச் சென்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கு, 14 ஆண்டுகளுக்குப் பின்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களான 2 ஈபிடிபியினரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.